31.4 C
Chennai
Wednesday, Jul 16, 2025
20 1471674984 7 coconutoil
சரும பராமரிப்பு

மார்பகங்களில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க உதவும் சில இயற்கை வழிகள்!

ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் சருமம் விரிவடைந்து சுருங்கும் போது ஏற்படும் தழும்புகளாகும். இந்த தழும்புகள் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும். குறிப்பாக தொடை, பிட்டம், கணுக்கால், மார்பகம், பிரசவத்தின் பின் வயிறு போன்ற இடங்களில் ஏற்படும். இந்த தழும்புகள் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.

இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க நிறைய க்ரீம்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை எந்த ஒரு பலனையும் தருவதில்லை. ஆனால் இயற்கை வழிகளின் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

சரி, இப்போது மார்பகங்கள் மட்டுமின்றி, உடலில் மற்ற பகுதிகளிலும் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம். அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

கற்றாழை ஜெல் தினமும் கற்றாழை ஜெல்லை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதிகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் கற்றாழையில் உள்ள உட்பொருட்கள் பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்து, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மெதுவாக மறையச் செய்யும்.

வைட்டமின் ஏ கேப்ஸ்யூல் நிறைய சரும சுருக்கத்தைப் போக்கும் க்ரீம்களில் வைட்டமின் ஏ உள்ளது. இது சரும சுருக்கங்களை மட்டுமின்றி, தழும்புகளையும் மறையச் செய்யும். அதற்கு வைட்டமின் ஏ கேப்ஸ்யூலை வாங்கி, அதனுள் உள்ள எண்ணெயைக் கொண்டு தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதிகளில் தடவி வர, விரைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறையும்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி உலர்ந்த பின், கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், அதில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள், சரும செல்களை புத்துயிர் பெறச் செய்யும்

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்யும். ஆகவே உங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் நீங்க வேண்டுமானால், எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தினமும் தடவி ஊற வைத்து கழுவி வாருங்கள்.

வைட்டமின் ஈ எண்ணெய் வைட்டமின் ஈ சருமத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின் ஈ உடலில் போதிய அளவில் இருந்தால், முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். உங்களுக்கு ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் இருந்தால், வைட்டமின் ஈ எண்ணெயை தினமும் சருமத்தில் தடவி மசாஜ் செய்து வாருங்கள்.

சர்க்கரை சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் எண்ணெய் சிறிது சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி ஸ்க்ரப் செய்து வர, நாளடைவில் ஸ்ட்ரெட்ச் மார்க் மறையும்.

தேங்காய் எண்ணெய் இன்னும் எளிமையான முறையில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைய செய்ய வேண்டுமானால், தேங்காய் எண்ணெயை தினமும் அப்பகுதியில் தடவி மசாஜ் செய்து வாருங்கள்.

20 1471674984 7 coconutoil

Related posts

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்(Video)?

nathan

சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்

nathan

ஒளிரும் சருமத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக்

nathan

உங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா?

nathan

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா? இதோ சில வழிகள்!!!

nathan

உங்கள் முகத்தின் வடிவம் உங்கள் பெர்சனாலிட்டியைப் பற்றி என்ன கூறுகிறது?தெரிஞ்சிக்கங்க…

nathan

இப்படி தினமும் செய்து வாருங்கள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

nathan

சில‌ பெண்களின் மார்பகங்கள், தொடைகளில் கோடுகள் உருவாவது ஏன்?

nathan

எண்ணெய் சருமத்திற்கான இதோ எளிய தீர்வுகள்!

nathan