28.3 C
Chennai
Tuesday, Jul 15, 2025
veg egg chapathi 15 1465993840
சைவம்

வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி

நீங்கள் சைவ பிரியரா? உங்களுக்கு வித்தியாசமான சுவையிலான சைவ உணவுகளை சுவைத்துப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் வெஜிடேரியன் முட்டை சப்பாத்தியை சமைத்து சுவையுங்கள். இது உண்மையிலேயே வித்தியாசமாகவும், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

சரி, இப்போது வெஜிடேரியன் முட்டை சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: சப்பாத்தி – 2 கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பௌலில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், ஒரு சப்பத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள பேஸ்ட்டைத் தடவி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இதுப்போன்று அனைத்து சப்பாத்தியையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி ரெடி!!!

veg egg chapathi 15 1465993840

Related posts

சுவையான தீயல் குழம்பு

nathan

சீரக சாதம்

nathan

கிராமத்து மிளகு குழம்பு

nathan

உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்

nathan

அசத்தலான சுவையில் இஞ்சி குழம்பு

nathan

சோளம் மசாலா ரைஸ்

nathan

மணக்கும் ஓமம் சாதம்

nathan

வாழைப்பூ துவட்டல்

nathan

சோயா பிரியாணி

nathan