26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201612200822243337 Ways to protect your lips in winter SECVPF
உதடு பராமரிப்பு

குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்

குளிர்காலத்தில் உதடுகளை கவனமாக பார்த்துக்கொள்வதற்கான குறிப்புகளை கவனமாக பின்பற்றினால் உதடு வெடிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்
குளிர்ந்த காற்றும் வறட்சியான சூழலும் உங்கள் உதடு மற்றும் தோலின் தன்மையை அதிக அளவில் பாதிக்கும். குளிர் மிகுதியாக உள்ள காலத்தில் நம்முடைய உதடுகள் வறட்சியையும் வெடிப்புகளையும் கொண்டு காணப்படுகிறது. நாம் எப்பொழுதும் குளிர்காலத்தில் உதடுகளை சரியாக பராமரிப்பதில்லை. பொதுவாகவே உதடுகள் ஒரு மென்மையான தோல்களினால் ஆன பகுதியாகும். எனவே அந்த தோல் குளிர்காலத்தில் எளிதாக பாதிப்படைய வாய்ப்புள்ளது.

எனவே குளிர்காலத்தில் உதடுகளை கவனமாக பார்த்துக்கொள்வதற்கான குறிப்புகளை கவனமாக பின்பற்றினால் உதடு வெடிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். குளிர்காலத்தில் உதடுகளை கவனமாக பார்த்துக்கொள்வதற்கான குறிப்புகளை இங்கு காணலாம்.

உங்கள் உதடுகளை வாரத்திற்கு ஒருமுறையாவது அழுத்தி தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெடிப்பை ஏற்படுத்துகிற இறந்த செல்களின் பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும். தோல் பரப்பினை நன்கு தளர்வாக வைப்பதன் மூலம் அதனை அழகாகவும் புத்துணர்வு உடனும் வைத்துக்கொள்ள முடியும். சிறிது சக்கரையும் தேனும் கலந்து உதடுகளில் தேய்ப்பதன் மூலம் இயற்கையான இளஞ்சிவப்பு நிற உதடுகளை பெற முடியும்.

குளிர்ச்சியான காலத்தின் இரவு நேரங்களில் உதடு கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு தேன் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அது தோலின் ஈரப்பதத்தை தக்கவைத்து உதடுகளுக்கு நீர்ச்சத்தினை கொடுக்கிறது. தேனில் இயற்கையான ஈரம் கவரும் தன்மை உள்ளதனால் உதடுகளுக்கு ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது.

குளிர்காலத்தில் உங்கள் உதடுகளை கடித்தால் உலர்ந்த தோலின் தன்மையை அது பாதிக்கும். வெடிப்புகளினால் உதட்டிலிருந்து ரத்தம் வருவதற்கான வாய்ப்பு உண்டு. உதட்டு தைலத்தை சரியான கால அவகாசத்தில் உபயோகிப்பதன் மூலம் நல்ல உதட்டு தன்மையை பெற முடியும்.

உதட்டு தைலங்களை உபயோகிப்பதன் மூலம் வறட்சி மற்றும் வெடிப்புடன் கூடிய உதடுகளை பாதுகாக்க முடியும். ஆனால் கற்பூரம், நீலகற்பூரம் மற்றும் பச்சைக்கற்பூரம் கொண்ட தைலங்களை தவிர்க்க வேண்டும். இவை உதடுகளின் வறட்சி தன்மையை அதிகரிக்கும். நீங்கள் உபயோகிக்கும் தைலத்தில் வைட்டமின் ஈ அதிகம் இருக்க வேண்டும். தேங்காய் எண்ணெய், கற்றாழை களிம்பு போன்ற இயற்கை கலவை உதடுகளுக்கு பயன் அளிக்கும்.

குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாக்க இயற்கை வழிகளை உபயோகிக்க வேண்டும். அது உதட்டின் வறட்சியை தவிர்த்து மென்மையையும் மிருதுவான தன்மையையும் கொடுக்கிறது. லெமன் சாறு, தேன், நெய் மற்றும் வெள்ளரிக்காய் உபயோகிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் காணலாம். சர்க்கரையை தேய்த்தல், கிளிசரின் – தேன் கலவை மற்றும் பன்னீர் – தேன் கலவை போன்றவற்றை குளிர்காலத்தில் உபயோகித்து உதடுகளை நல்ல முறையில் பாதுகாக்க முடியும்.201612200822243337 Ways to protect your lips in winter SECVPF

Related posts

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

அழகான உதடுகளுக்கு…!

nathan

வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?

nathan

லிப்ஸ்டிக் காதலிகளே… ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு லிப்ஸ்டிக் சாப்பிடுகிறீர்கள் தெரியுமா?

nathan

உதடுகளை கவர்ச்சியாக மாற்ற வைக்கும் புதிய மருத்துவம்!!

nathan

உதடு சிவப்பாக மாற

nathan

உங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? 10 நிமிடத்தில் அத போக்க இதோ ஓர் வழி!

nathan

கவர்ச்சிகரமான உதட்டை பெறனுமா?

nathan

குளிர்காலத்தில் உதட்டை எப்படி பராமரிக்கணும் தெரியுமா?

nathan