uOBHPKq
சைவம்

கொப்பரிக்காய வங்காய சிண்டசெட்டு புளுசு

என்னென்ன தேவை?

கத்தரிக்காய் – 2
தேங்காய் – அரைமூடி
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
உளுந்து- 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – 1 கொத்து
வெங்காயம் – 1
பூண்டு – 10 பற்கள்
மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
புளி- எழுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

கத்தரிக்காயை நீளவாக்கிலும், வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவி மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம்,பெருங்காயம், பூண்டு, கத்தரிக்காய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும், மிளகாய்தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு புளிச்சாறு, உப்பு சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள். நன்கு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்துக் கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்குங்கள். ஆந்திர கொப்பரிக்காய வங்காய சிண்டசெட்டு புளுசு ரெடி. uOBHPKq

Related posts

சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்

nathan

உருளைக்கிழங்கு கிரிஸ்பி

nathan

மேத்தி பன்னீர்

nathan

பாகற்காய் புளிக்குழம்பு

nathan

சுவையான தக்காளி குருமா

nathan

வெஜ் பிரியாணி

nathan

சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் பாலக்கீரை தால்

nathan

வெண்டைக்காய் பொரியலை ஒரு முறை இப்படி செய்து பாருங்க…

nathan

பரோட்டா!

nathan