22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
அறுசுவைசைவம்

பூண்டு நூடுல்ஸ்

thailand-kari-noodles-2232
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் – 1 பாக்கெட்
பூண்டு – 10 பற்கள்
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
கேரட் – 1 (நறுக்கியது)
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நூடுல்ஸை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், நூடுல்ஸை போட்டு, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு, பின் குளிர்ந்த நீரால் நூடுல்ஸை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் தூள், வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின்பு சேரட், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூண்டு நூடுல்ஸ் ரெடி!!!

Related posts

சூப்பரான வடை மோர் குழம்பு

nathan

சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி !….

sangika

சமைக்கலாம் வாங்க! கடாய் பனீர்- Restaurant Style Karahi Paneer :

nathan

காலிஃப்ளவர் 65

nathan

கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

nathan

தக்காளி – புதினா புலாவ்

nathan

காளான் லாலிபாப்

nathan

மேங்கோ கர்டு ரைஸ்

nathan