சருமத்தில் இறந்த செல்கள் வெளியேறாமல் ஒரே இடத்தில் குழுமி காணப்படும். இந்த இடத்தில் புதிய செல்கள் வளராமல் தேங்கியிருக்கும். அந்த பகுதியில் உண்டாவதுதான் கரும்புள்ளி, தேமல் அல்லது மங்கு போன்ற சருமப் பிரச்சனைகள்.
அவ்வப்போது கடலை மாவு, அரிசி மாவு, பயிற்றமாவு போன்ற இயற்கையான ஸ்க்ரப் உபயோகப்படுத்தினால் இறந்த செல்கள் தங்காமல் வெளியேறிவிடும். சருமமும் சுத்தமாக இருக்கும். இது முகத்தின் அழகை கெடுப்பதோடு, உங்கள் சருமம் ஆரோக்கியமற்றதாக காண்பிப்பதற்கும் சான்று.
இப்படி முகத்தை பாழ்படுத்தும் கரும்புள்ளிகளையும், தேமலையும் போக்க இங்கே சொல்லப்படும் டிப்ஸை உபயோகப்படுத்திப் பாருங்கள். பலன் எளிதில் கிடைக்கும்.
தேவையானவை ;
மஞ்சள் – 2 டீஸ்பூன்
பப்பாளி – கால் கப்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
பப்பாளியை மசித்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சளை கலந்து கொள்ளுங்கள். இறுதியாக தேன் சேர்த்து கலக்கி முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
நிறைய கரும்புள்ளிகள் இருந்தால் இந்த குறிப்பை தினமும் பயன்படுத்தலாம் அல்லது வாரம் 2 முறை உபயோகித்து பாருங்கள். நிச்சயம் பலனளிக்கும்.