26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
11 1470896013 9 shave4
ஆண்களுக்கு

ஆண்களே! உங்க தாடி மென்மையா இருக்க அடிக்கடி இத செய்யுங்க…

தற்போதைய பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களால் தான் அதிகம் கவரப்படுகிறார்கள். ஆண்களுக்கு அழகே தாடி தான் என்று பல பெண்கள் கருதுகிறார்கள். எனவே நீங்கள் உங்களுக்கு பிடித்த பெண்ணைக் கவர நினைத்தால், தாடியை வளர்த்து, அழகாக பராமரித்து வாருங்கள்.

குறிப்பாக தாடியை மென்மையாக பராமரித்து வாருங்கள். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிகளை அன்றாடம் பின்பற்றி வந்தால் போதுமானது. சரி, இப்போது தாடி மென்மையாக இருப்பதற்கு உதவும் வழிகள் என்னவென்று பார்ப்போம்.

ஷாம்பு
வாரத்திற்கு 2 முறை தாடியை ஷாம்பு போட்டு கழுவுங்கள். இதனால் தாடி மென்மையாகவும், பட்டுப்போன்றும் இருக்கும். அதிலும் கடைகளில் விற்கப்படும் தாடிக்கு என்று பிரத்யேகமாக விற்கப்படும் ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்துங்கள். அதுவும் ஷாம்புவை தாடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக தினமும் தாடிக்கு ஷாம்பு போடாதீர்கள்.

கண்டிஷனர்
தாடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இதனால் கண்டிஷனர் தாடியை ஈரப்பதத்துடன் வைத்து, தாடி கரடுமுரடாக இருப்பதைத் தடுக்கும்.

நன்கு கழுவவும்
ஷாம்பு மற்றம் கண்டிஷனர் பயன்படுத்திய பின், தாடியை நீரால் நன்கு கழுவ வேண்டும். இல்லாவிட்டால், தாடி அதில் உள்ள கெமிக்கல்களால் வறட்சியடைந்து, சரும எரிச்சலையும் உண்டாக்கும். மேலும் தாடியை சீப்பு பயன்படுத்தி சீவ வேண்டும் மற்றும் நல்ல சுத்தமான துணியால் துடைத்து, உலர்த்த வேண்டும்.

தேங்காய், பாதாம் மற்றும் ஆலிவ் ஆயில்
தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, அத்துட னசிறிது மில்க் க்ரீம் சேர்த்து, தாடியில் தடவி மசாஜ் செய்து, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவி, சீப்பு பயன்படுத்தி சீவ வேண்டும். இதனால் தாடியில் உள்ள பலவீனமான முடிகள் வெளியேற்றப்பட்டு, தாடிக்கு நன்கு ஊட்டம் கிடைக்கும்.

ஆரஞ்சு சிகிச்சை
ஆரஞ்சு தோலின் பொடியை, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, தாடியில் நன்கு தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அடுத்து ஐஸ் கட்டியான தாடியை சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி மாதத்திற்கு 1 முறை செய்து வந்தால், நிச்சயம் தாடி மென்மையாக இருக்கும்.

ஃபேஸ் வாஷ்
ஆண்கள் தினமும் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் தாடியில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, தாடி சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

ஷேவிங் டிப்ஸ் #1
ஷேவிங் செய்யும் முன் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயைத் தடவி, பின் ஷேவ் செய்தால், தாடி மென்மையாக வளரும்.

ஷேவிங் டிப்ஸ் #2
நல்ல ரேசர் மற்றும் ஷேவிங் க்ரீம்மைப் பயன்படுத்த வேண்டும். மேலும் 3 மாதத்திற்கு 1 முறை ரேசரை மாற்ற வேண்டும்.

ஷேவிங் டிப்ஸ் #3
தாடியை அடிக்கடி ட்ரிம் செய்வதால், தாடி ஒரே சீரான அளவில் வளரும். மேலும் தாடியின் முனைகளில் உள்ள வெடிப்புக்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு, தாடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதனால் அடிக்கடி தாடியை உங்களுக்கு பிடித்த ஸ்டைலில் மாற்றலாம்.11 1470896013 9 shave4

Related posts

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

nathan

இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்!…

sangika

இதை இவ்வாறு சாப்பிட்டால் இயற்கை வயாகரவாகவே செயல்படும்!…

sangika

ஆண்களின் வழுக்கை பிரச்சினைக்கு தீர்வு தரும் இயற்கை மருந்துகள் !

nathan

ஆண்களே இது உங்களுக்கான சின்ன சின்ன பியூட்டி டிப்ஸ் – படித்து ஃபாலோ பண்ணுங்க!

nathan

ஆண்களே! முடி கொட்டாமல் தடுக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

தாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்…!

nathan

ஆண் தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் சொல்ல விரும்புகிறான் !..சுவாரஸ்யமான கட்டுரை

nathan

தாடி வளராமல் இருப்பதற்கு காரணம் என்ன?……..

sangika