wrinkle 10 1470829006
முகப் பராமரிப்பு

முகத்தை இளமையாக்கும் ஆளி விதை மாஸ்க் !!

அந்தந்த பருவத்தில் உண்டாகும் மாற்றங்களை எப்போதும் மாற்றமுடியாது. செயற்கையாக மறைத்தாலும் அது நீடிக்காது. தொடர்ந்து செயற்கைப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். 50 வயதினில் முதுமையில் உண்டாகும் சுருக்கங்களையும் நரைகளையும் ரசிக்கலாம். அது தனி அழகை தரும்.

ஆனால் முப்பதுகளிலேயே வரும் சுருக்கங்களையும் நரைகளையும் ஏளனத்துடன்தான் எல்லாரும் பார்ப்பார்கள். காரணம் உங்களது தவறான வாழ்க்கை முறைதான். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, மது, ரசாயனம் கலந்து அழகு சாதனங்கள், போதிய நீர் குடிக்காமலிருப்பது ஆகியவைகளை சொல்லலாம்.

இளமையில் முதுமையான தோற்றம் உண்மையில் வருத்தப்படத்தான் வைக்கும். மனம் சோர்ந்து போகாமல் இந்த குறிப்பை உபயோகிப்படுத்திப் பாருங்க. உங்களுக்கு மிகவும் பயனைத் தரும்.

தேவையானவை: தேன் – 1 ஸ்பூன் ஆளி விதை – 1 ஸ்பூன் யோகார்ட் – 1 ஸ்பூன்.

ஆளி விதையை பொடி செய்து அதனுடன் தேன்,. யோகார்ட் கலந்து முகம் கழுத்து ஆகியவற்றில் தடவுங்கள். மேல் நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள்.

யோகார்ட் இறந்த செல்களை வெளியேற்றிவிடும். ஆளிவிதை சுருக்கங்களை போக்கி சரும இறுக்கத்தை தரும்.

அதேபோல் தேன் ஈரப்பதம் அளித்து, சுருக்கங்களை போக்கி, இளமையான மென்மையான சருமம் தரும். இந்த மூன்றின் கலவையில் சருமம் உயிர் பெறும். வாரம் மூன்று நாட்கள் செய்து பாருங்கள். நல்ல பலன்களை தரும்.

wrinkle 10 1470829006

Related posts

லிப்ஸ்டிக் உபயோகித்தால் இந்த பிரச்சனைகள் வருமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

முகத்திற்கு தக்காளி பேஷியல் செய்வது எப்படி?

nathan

வாழ்நாள் முழுவதும் அழகாக இருக்க விரும்புகிறீர்களா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பவுடர் போட போறீங்களா

nathan

நீங்களே சொந்தமாக உங்களுக்கான கேரட் சோப்பை எவ்வாறு தயாரிப்பது……

sangika

முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும் சமையலறைப் பொருட்கள்

nathan

இவ்வாறான காரணங்களினால் தான் முகம் முதுமைத் தோற்றத்தை அடைகின்றது!…

nathan

வாயைச் சுற்றியுள்ள சரும கருமைகளுக்கு சில இயற்கை ஃபேஸ் மாஸ்க்…

nathan

சிவப்பழகை சில வாரங்களில் பெற இவற்றை செய்து பாருங்கள்

sangika