eyebrow 09 1470741990
முகப் பராமரிப்பு

அடர்த்தியான புருவத்தை தரும் கற்றாழை சீரம்!!

பெண்களுக்கு அடர்த்தியான புருவமும், பெரிய இமைகளை கொண்ட கண்களும் மிக அழகான ஒரு தோற்றத்தை தரும். புருவமே இல்லாமல் பெரிய கண்களுடன் இருந்தால் அழகு கொஞ்சம் குறைந்துதானிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நிறைய பேருக்கு, பிறந்தது முதலே புருவங்கள் சரிவர வளர்ச்சி இருக்காது. அதற்காக அப்படியே விட வேண்டுமென்பதில்லை. போதிய பராமரிப்பு கொடுத்தால் நிச்சயம் மற்றவர்களைப் போல உங்களுக்கும் அடர்த்தியான வில் போன்ற புருவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை

அப்படியொரு குறிப்பு இங்கே தரப்பட்டுள்ளது. உபயோகித்து பாருங்கள். பின்னர் உங்கள் பலனை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

தேவையானவை : விளக்கெண்ணெய் – அரை டீஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெய் – 2 கேப்ஸ்யூல், சோற்றுக் கற்றாழை சதைப்பற்று- 1 டேபிள் ஸ்பூன் வாசலின் – 1 டேபிள் ஸ்பூன்

விளக்கெண்ணெய் புருவத்தில் முடி வளர்ச்சியை தூண்டும். விட்டமின் ஈ மற்றும் வாசலின் அங்கே ஈரப்பதம் அளித்து, சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மிருதுவாக்கும். சோற்று கற்றாழை முடி வளர்ச்சியை தூண்டி புருவத்தை அடர்த்தியாக வளர்ச் செய்யும்.

செய்முறை :
முதலில் விளக்கெண்ணெயில் விட்டமின் ஈ எண்ணெயை கலந்து, பின் சோற்றுக் கற்றாழை மற்றும் வாசலினை சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த க்ரீமை தினமும் இரவு தூங்குவதற்கு முன், புருவத்திலும் இமையிலும் தடவிவிட்டு தூங்குங்கள். க்ரீமை தடவதற்கு முன் புருவத்தின் முடிகளை லேசாக கிள்ளி விடுங்கள். இதனால் க்ரீம் தடவும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எளிதில் உறியப்படும். வளர்ச்சியையும் தூண்டும்.

eyebrow 09 1470741990

Related posts

முக சுருக்கம் வருவதை தடுக்கும் மாம்பழ பேஸ் பேக்

nathan

பெண்களே 30 வயசுக்கு முன்னாடி இதெல்லாம் செஞ்சுருங்க!

nathan

முப்பது வயதில் முகச் சுருக்கங்களுக்கு பை பை சொல்லுங்கள்!!

nathan

மில்க் கிரீம் மூலம் நாம் நமது சருமத்தை ஜொலிக்கச் செய்யலாம். இதன் பயன்பாடு இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது.

nathan

கருப்பாக இருப்பவர்களுக்கு வீட்டில் செய்யக்கூடிய இயற்கை பியூட்டி டிப்ஸ்

nathan

சருமத்தை பொலிவாக்கும் குங்குமாதி தைலம்

nathan

மறைமுக பகுதியில் இருக்கும் பருக்களின் தழும்புகளை இப்படி தான் நீக்கனும் தெரியுமா!

nathan

வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்!

nathan

உங்கள் மூக்கில் இந்த அடையாளம் இருக்கா? அப்ப இத படிங்க!!

nathan