காய்கறிகளிலேயே ஆரோக்கியமானது வெங்காயம். இத்தகைய வெங்காயம் தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் உதவுவதாக பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மையா என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம்.
அது உண்மையே! சரி, இப்போது வெங்காயம் எப்படி தலை முடி உதிர்வதைத் தடுத்து, தலைமுடியின் அடர்த்தியை அதிகரித்து, நரை முடி வராமல் தடுக்கிறது என்றும், வெங்காயத்தை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்துவது என்றும் காண்போம்.
வெங்காயம் வெங்காயத்தில் உள்ள உட்பொருட்கள், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஸ்கால்ப்பில் இருக்கும் கிருமிகள் மற்றும் இதர தொற்றுக்களை அழித்து, தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
சல்பர் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது மயிர்கால்களைப் புதுப்பிக்க உதவும் மற்றும் உட்காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கும்.
பிராட்போர்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்தைச் சேர்ந்த பிராட்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நரை முடி வருவதற்கும், தலைமுடி மெலிவதற்கும் ஸ்கால்ப்பில் ஹைட்ரஜன் பெராக்ஸைடின் அதிகப்படியான உற்பத்தியும், இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கேட்டலேஸ் போன்றவற்றின் குறைபாடும் தான் காரணம் என கண்டறிந்துள்ளனர்.
வெங்காயத்தின் நன்மை வெங்காய சாற்றினை தலையில் பயன்படுத்தும் போது, ஸ்கால்ப்பில் கேட்டலேஸின் அளவு அதிகரித்து, ஹைட்ரஜன் பெராக்ஸைடின் அளவு குறையும். இதனால் நரைமுடி போவதோடு, நன்கு அடர்த்தியாகவும் முடி வளர்வதையும் கண்டறிந்துள்ளனர் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.
வெங்காய சாற்றினைத் தயாரிப்பது எப்படி? வெங்காயத்தின் தோலை நக்கிவிட்டு, துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்துவது எப்படி? வெங்காய சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
குறிப்பு சிலருக்கு வெங்காய சாறு அலர்ஜியாக இருக்கும். அத்தகையவர்கள் இந்த முறையைத் தவிர்த்துவிட வேண்டும். மாறாக கறிவேப்பிலை போன்றவற்றைக் கொண்டு தலைமுடியைப் பராமரிக்கலாம்.