26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
18 1447843615 salt and pepper tofu recipe1
அசைவ வகைகள்

சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

மாலையில் வீட்டிலேயே அருமையான ஓர் சைனீஸ் ஸ்நாக்ஸ் செய்து சுவைக்க ஆசைப்பட்டால், புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு சுவையான ஓர் சைனீஸ் ரெசிபியை செய்து சுவையுங்கள். இந்த ரெசிபிக்கு பெயர் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு. இது பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்: டோஃபு – 200 கிராம் உப்பு – தேவையான அளவு மிளகுத் தூள் – தேவையான அளவு சோள மாவு – 3-4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 4-5 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு… எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன் பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் – 1 (நறுக்கியது) சோயா சாஸ் – 2 டீஸ்பூன் சர்க்கரை – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு மிளகுத் தூள் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் டோஃபுவை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி கிளறி, பின் அதில் சோள மாவைத் தூவி பிரட்டி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், டோஃபுவை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் சர்க்கரை சேர்த்து கிளறி, சோயா சாஸ் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு அதில் வதக்கி வைத்துள்ள டோஃபுவை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி கிளறி இறக்கினால், சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு ரெடி!!!

18 1447843615 salt and pepper tofu recipe

Related posts

சுவையான நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

சூப்பரான சிக்கன் நெய் ரோஸ்ட்

nathan

திகட்டாமல் தித்திக்கும் சிக்கன் லாலிபாப்!

nathan

சுவையான ஹரியாலி முட்டை கிரேவி

nathan

யாழ்ப்பாண முறையிலான ஆட்டிறைச்சி குழம்பு சமையால்

nathan

சுவையான பிராந்தி சிக்கன் ரெசிபி

nathan

மீல் மேக்கர் கிரேவி

nathan

சிக்கன் தால் ரெசிபி

nathan

சுவையான மட்டன் வடை

nathan