28.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
04 1470297527 6 face mask
முகப் பராமரிப்பு

10 நிமிடத்தில் ப்ளீச்சிங் செய்த மாதிரியான முகம் வேண்டுமா? அப்ப இந்த ஒரு ஃபேஸ் மாஸ்க் போடுங்க…

உங்கள் முகம் கருப்பாக, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் மேடு பள்ளங்களுடன் உள்ளதா? இதனைப் போக்க எத்தனையோ க்ரீம்களை முயற்சித்தும் பலனில்லையா? மாதம் ஒருமுறையாவது அழகு நிலையம் சென்று மொய் வைப்பவரா? இவை எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஓர் அற்புத ஃபேஸ் மாஸ்க் உள்ளது.

அது தான் முட்டை மற்றும் டிஷ்யூ பேப்பர் கொண்டு போடப்படும் ஃபேஸ் மாஸ்க். இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுவதால், முகத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்களுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முகப் பொலிவு மேம்பட்டு காணப்படும்.

சரி, இப்போது முட்டை டிஷ்யூ ஃபேஸ் மாஸ்க் போடுவதால் கிடைக்கும் நன்மைகளையும், அதை எப்படி போட வேண்டும் என்பதையும் காண்போம்.

நன்மை #1 இந்த ஃபேஸ் மாஸ்க் போடுவதால், மூக்கு, தாடை, கன்னம் போன்ற பகுதியில் சொரசொரப்பை ஏற்படுத்தும் கரும்புள்ளிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

நன்மை #2 சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்களாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கைப் போட்டால், சருமத் துளைகள் இறுக்கமடைந்து, மேடு பள்ளங்கள் மறைய ஆரம்பிக்கும்.

நன்மை #3 வெளியே அதிகம் சுற்றுவதால், சருமத் துளைகளில் அழுக்குகள் மற்றும் தூசிகள் அதிகம் சேர்ந்து, முகம் பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். ஆனால் முட்டை டிஷ்யூ ஃபேஸ் மாஸ்க் போடுவதால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக நீங்கி, முகத்தின் பொலிவு மேம்பட்டு இருக்கும்.

நன்மை #4 சில பெண்களுக்கு முகத்தில் சிறு முடிகள் வளர்ந்து அசிங்கமாக இருக்கும். முட்டை டிஷ்யூ ஃபேஸ் மாஸ்க்கை தொடர்ச்சியாக போடுவதன் மூலம், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளின் வளர்ச்சி தடுக்கப்படும்.

ஃபேஸ் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்: முட்டை – 1 டிஷ்யூ பேப்பர் – சிறிது

செய்முறை: * முதலில் முகத்தை நீரில் கழுவி, உலர்த்திக் கொள்ள வேண்டும். * பின் ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவ வேண்டும். * பின்பு டிஷ்யூ பேப்பரை முகத்தின் மேல் வைத்து, நன்கு உலர வைக்க வேண்டும். * நன்கு உலர்ந்த பின், மீண்டும் முட்டையின் வெள்ளைக்கருவைத் தடவி, டிஷ்யூ பேப்பரை வைத்து உலர விட வேண்டும். வேண்டுமானால் மீண்டும் முட்டையையும், டிஷ்யூ பேப்பரையும் வைக்கலாம். * டிஷ்யூ பேப்பர் நன்கு உலர்ந்த பின், மெதுவாக உரித்து எடுத்து, முகத்தை நீரில் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, சிறிது மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.

04 1470297527 6 face mask

Related posts

உங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? சூப்பர் டிப்ஸ்

nathan

முக அழகை கெடுக்கும் தோல் சுருக்கத்தை போக்க சில வழிகளை பார்க்கலாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் 5 நிமிடம் இதை முகத்தில் தடவினால், பருக்கள், தழும்புகள் மாயமாய் மறையும்!

nathan

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

sangika

தினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா முக பராமரிப்பில் தேனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்கள்…!!

nathan

வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் வழிகள்! சூப்பர் டிப்ஸ்……

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும வறட்சியைத் தடுக்கும் பழ ஃபேஸ் பேக்குகள்!

nathan

சூப்பர் டிப்ஸ் எண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு

nathan