என்னென்ன தேவை?
எண்ணெய் / நெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 5
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 4
தக்காளி – 1
முருங்கை இலை – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு, மிளகு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் சீரகம் சேர்த்து பொரிக்கவும். அதனுடன் பூண்டு, துருவிய இஞ்சி, சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும். பின் கொஞ்சம் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும். உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.