மாலையில் பசியுடன் இருக்கும் போது, வீட்டில் நேந்திரம் பழம் இருந்தால், அதனைக் கொண்டு கேரளா ஸ்டைல் ஸ்நாக்ஸாக நேந்திரம் பழம் அப்பம் செய்து சுவையுங்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த நேந்திரம் பழம் அப்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: நேந்திரம் பழம் – 1 எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
மாவிற்கு… மைதா – 1 கப் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை ஏலக்காய் – 2 (தட்டியது)
செய்முறை: முதலில் நேந்திரம் பழத்தை நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக கலந்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், வாழைப்பழ துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், நேந்திரம் பழம் அப்பம் ரெடி!!!