என்னென்ன தேவை?
அவல் – 4 டேபிள்ஸ்பூன்,
வாழைப்பழம் (பூவன்) – 1,
பனங்கற்கண்டு – கால் கப்,
நெய் – சிறிதளவு ,
பால் – 1 கப்,
முந்திரி – சிறிதளவு,
உலர் திராட்சை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவைத்து, குளிர வைத்துக் கொள்ளுங்கள். பனங்கற்கண்டை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பனங்கற்கண்டோடு வாழைப்பழத்தைச் சேர்த்து கையால் மசித்துக் கொள்ளுங்கள். குளிர வைத்துள்ள பாலை வாழைப்பழக் கலவையில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து, கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், அவலையும், உலர் திராட்சை, முந்திரியையும் தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள். பிறகு, கிளாஸ் அல்லது டம்ளரில் சிறிதளவு பால், சிறிதளவு அவல் என்று போட்டு மேலே முந்திரி திராட்சையைப் போட்டு பறிமாறுங்கள். சத்தும், சுவையும் மிக்க இந்த அட்டுக்குலு பாலு குழந்தைகளை வெகுவாக கவரும்.