31.8 C
Chennai
Wednesday, Jul 16, 2025
karpooravalli leaves bajji recipe 22 1458645663
சிற்றுண்டி வகைகள்

கற்பூரவள்ளி இலை பஜ்ஜி

மாலையில் டீ, காபி குடிக்கும் போது, அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலான பஜ்ஜி செய்து சாப்பிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். அதிலும் சளி, இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், அதனைக் குணப்படுத்தும் கற்பூரவள்ளி இலைகளைக் கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

இங்கு கற்பூரவள்ளி இலைகளைக் கொண்டு எப்படி பஜ்ஜி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: கற்பூரவள்ளி – 20 இலைகள் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

பஜ்ஜி மாவிற்கு… கடலை மாவு – 1 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை பேக்கிங் சோடா – 1 சிட்டிகை தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை: முதலில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு நீரில் சுத்தமாக கழுவி, உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் பஜ்ஜி மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும், கற்பூரவள்ளி இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கற்பூரவள்ளி இலை பஜ்ஜி ரெடி!!!

karpooravalli leaves bajji recipe 22 1458645663

Related posts

கிளப் சாண்ட்விச் பரோட்டா எப்படிச் செய்வது?

nathan

தஹி பப்டி சாட்

nathan

தூதுவளை மசாலா தோசை

nathan

பிட்டு

nathan

எள் உருண்டை :

nathan

முட்டை சென்னா

nathan

உருளைக்கிழங்கு பக்கோடா

nathan

இனி வீட்டிலேயே கொத்து பரோட்டா செய்யலாம்…

nathan

பருப்பு வடை,

nathan