சிறிய கண்களுக்கு கச்சிதமா அழகு சேர்க்கும் பெரிய இமைகள். நிறைய பேருக்கு கண்கள் பெரியதாக இருக்கும். ஆனால் இமைகள் போதிய வளர்ச்சி இருக்காது. இது ஒரு குறையாக தெரியும். இமைகள் நீண்டு அழகாக வளர ஒரு அழகு குறிப்பு உங்களுக்காக இங்கே காத்திருக்கிறது.
செயற்கை இமைகள் கண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. கண்களில் இருக்கும் சருமம் மிகவும் மென்மையானது. இந்த செயற்கை இமைகள் அலர்ஜி, அரிப்பு, தடிப்பை ஏற்படுத்தும்.
அதே போல், அடர்த்தியாக தெரிய வேண்டுமென்பதற்காக மஸ்காரா சிலர் போடுவார்கள். அதுவும் தினம் உகந்தது அல்ல. இயற்கையாக இமைகளுக்கு போஷாக்கு அளித்திடுங்கள் எண்ணெயின் மூலம்.
இங்கே கொடுத்திருக்கும் எண்ணெய் கண்களின் முடியின் வேர்க்கால்களை தூண்டி, நீண்டு வளரச் செய்யும். எப்படி அதனை செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை ; விளக்கெண்ணெய் – 1 டீ ஸ்பூன் ஈமு எண்ணெய் – 1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – அரை டீ ஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெய் – 2 கேப்ஸ்யூல்
இந்த எண்ணெய்கள் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்தவை. எந்த தீங்கும் விளைவிக்காதவை. விளக்கெண்ணெய் அடர்த்தியாக இமைகளை வளர்ச் செய்யும்.
ஈமு எண்ணெய் இமைகளுக்கு பலமும் போஷாக்கும் தரும். தேங்காய் எண்ணெய் மற்றும், விட்டமின் ஈ ஈரப்பததை அளித்து, கண்களை மென்மையாக்கும்.
செய்முறை : மேற்கூறிய எல்லா எண்ணெய்களையும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வருடம் வரை வைத்து உபயோகிக்கலாம். தினமும் தூங்குவதற்கு முன் இந்த எண்ணெயை கண் இமை மற்றும் புருவத்திலும் தடவி இதமாக மசாஜ் செய்யவும். ஒரு மாதத்திலேயே வித்யாசம் காண்பீர்கள்.