24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201604291001104605 how to make chicken pakora SECVPF
அசைவ வகைகள்

ருசியான… சிக்கன் பக்கோடா

உங்களுக்கு சிக்கன் பக்கோடா செய்யத் தெரியுமா? அதுவும் மிகவும் எளிய செய்முறையில் ருசியாக செய்யத் தெரியுமா? இல்லையெனில் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

ஏனெனில் இங்கு சிக்கன் பக்கோடாவை எப்படி மிகவும் எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 100 கிராம் முட்டை – 1 சோள மாவு – 1/4 கப் அரிசி மாவு – 1/4 கப் கடலை மாவு – 1/4 கப் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு… மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 3-4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் பக்கோடா ரெடி!!!

201604291001104605 how to make chicken pakora SECVPF

Related posts

நாட்டு ஆட்டு குருமா

nathan

காரசாரமான இறால் மசாலா செய்வது எப்படி

nathan

மட்டன் சுக்கா

nathan

வாழைப்பழ முட்டை தோசை

nathan

சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி

nathan

அசத்தலான ‘லெமன் சிக்கன்’ !

nathan

சைனீஸ் ப்ரைட் ரைஸ் : செய்முறைகளுடன்…!

nathan

சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்…!​

nathan

எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி

nathan