26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201612070910152627 ragi sweet puttu SECVPF
சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகு இனிப்பு புட்டு செய்வது எப்படி

கேழ்வரகு புட்டு மிகவும் சத்தானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். இப்போது அந்த சத்தான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கேழ்வரகு இனிப்பு புட்டு செய்வது எப்படி
தேவையானப் பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்
சர்க்கரை – 1/4 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
தேங்காய்த்துருவல் – 1/2 கப்
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – 2 முதல் 3 டீஸ்பூன் வரை
உப்பு – ஓரிரண்டு சிட்டிகை

செய்முறை :

* கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பையும் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்.

* ஒரு சுத்தமான துணியை எடுத்து, தண்ணீரில் அலசிப் பிழிந்துக் கொள்ளவும். பிசறி வைத்துள்ள கேழ்வரகு மாவை இந்த ஈரத்துணியில் போட்டு, லூசாக மூட்டை போல் முடிந்துக் கொள்ளவும். இதை இட்லி தட்டின் மேல் வைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

* வெந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.

* பின்னர் அதில் நெய்யை உருக்கி ஊற்றவும். அத்துடன் சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப்பதில், வெல்லத்தைப் பொடித்தும் சேர்க்கலாம். 201612070910152627 ragi sweet puttu SECVPF

Related posts

இடியாப்பம் சௌமீன்

nathan

குஷ்பு  இட்லி,தட்டு  இட்லி,பெப்பர்  இட்லி

nathan

சுவையான தயிர் வடை செய்வது எப்படி

nathan

கொத்து ரொட்டி

nathan

வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்…!

nathan

பீட்ரூட் ராகி தோசை செய்முறை விளக்கம்

nathan

மிரியாலு பப்பு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃப்ரைடு சிக்கன் மொமோஸ்

nathan

காஷ்மீரி கல்லி

nathan