24.5 C
Chennai
Thursday, Dec 26, 2024
19 mutton 1 300
அசைவ வகைகள்

சண்டே மட்டன் செய்யலாமா? இதோ உங்களுக்கான ஸ்பெஷல் கிச்சன் மட்டன் ரெசிப்பி. செய்து அசத்துங்கள்.

சண்டே மட்டன் செய்யலாமா? இதோ உங்களுக்கான ஸ்பெஷல் கிச்சன் மட்டன் ரெசிப்பி. செய்து அசத்துங்கள்.

#மட்டன்தால்சா

தேவையானவை:
மட்டன் – கால் கிலோ (எலும்பில்லாத சிறிய துண்டுகள் மட்டும் பயன்படுத்தவும்)
துவரம்பருப்பு – அரை கப்
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
இஞ்சி – ஒரு விரல் அளவு (தட்டிவைத்துக் கொள்ளவும்)
பூண்டு – 8 (5 தட்டியது, 3 முழுப்பல்லாக வைத்துக்கொள்ளவும்)
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
(இரண்டாகக் கிள்ளிக்கொள்ளவும்)
கறிவேப்பிலை – சிறிது
லவங்கம் – ஒரு சிறிய துண்டு
பட்டை – 1
புளி – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 3
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
சுடுநீர் – 2 கப்

செய்முறை:
கறியை நன்கு கழுவிவைக்கவும். குக்கரில் இரண்டு கப் தண்ணீருடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மூடிபோட்டு 10 நிமிடங்கள் சிறுதீயில் வேகவிடவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி பிரஷர் இறங்கும்வரை தனியாக வைக்கவும். மற்றொரு குக்கரை அடுப்பில்வைத்து ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, ஏலக்காய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். பிறகு தட்டிய இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் கறி இரண்டு கப் சுடுநீர் கலந்து மூடி, சிறுதீயில் 15 நிமிடங்கள் வேகவிட்டு (எலும்புக் கறியாக இருந்தால் கூடுதலாக 10 நிமிடங்கள் வேகவிடவும்) அடுப்பில் இருந்து இறக்கவும். பிரஷர் அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பை அதனுடன் சேர்க்கவும்.
இப்போது குக்கரை மீண்டும் அடுப்பில்வைத்து, பருப்பு – கறி கலவையில் புளித்தண்ணீர் சேர்க்கவும். கலவை அடர் கிரேவி பதம் வரும்வரை சிறுதீயில் கிளறி இறக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து மீதமிருக்கும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துச் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் (விதையை நீக்கிக் கொள்ளவும்) சேர்த்து மிளகாயின் நிறம் மாறும் வரை வறுக்கவும். இத்துடன் மீதமிருக்கும் பூண்டுப் பல்லை சேர்த்து பூண்டு நிறம் மாறும்வரை வறுத்து, இந்தக் கலவையை மட்டன் தால்சாவில் சேர்த்து சூடான சாதம் அல்லது பிரியாணியுடன் பரிமாறவும். 19 mutton 1 300

Related posts

தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு

nathan

கிராமத்து கோழி குழம்பு

nathan

முட்டை மலாய் குருமா… எப்படி செய்வது தெரியுமா?

nathan

சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

nathan

சுவையான முட்டை சுக்கா

nathan

சூப்பரான சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா

nathan

செட்டிநாடு துண்டு மீன் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு மட்டன் மசாலா செய்வது எப்படி

nathan

ஸ்பெஷல்-ஈசி மட்டன் பிரியாணி,tamil samayal asaivam

nathan