சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான உணவு கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – 1 கப்,
தேங்காய்ப்பால் – அரை கப்,
பச்சைமிளகாய் – 2,
கேரட் – 1
பீன்ஸ் – 10
பட்டாணி – சிறிதளவு,
தண்ணீர், உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை :
* காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும்.
* அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் கோதுமை ரவையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
* வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.
* சத்தான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி ரெடி.
பலன்கள்: சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும்.