28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201611301018310938 Pineapple use to skin beauty SECVPF
சரும பராமரிப்பு

சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி

சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.

சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி
சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.

* அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும்.

* சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

* சிலருக்கு முகத்தில் நீர் கோத்து, வீங்கிப்போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு அருமருந்து. அன்னாசிப்பழச் சாறுடன் தேங்காய்ப் பாலை சம அளவு எடுத்து, இவை கலக்கும் அளவுக்கு பயத்தமாவு சேர்த்து முகத்தில் தடவி, 5 நிமிடம் கழித்து கழுவினால் வீக்கம் குறையும். இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான சிகிச்சை. எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.

* சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன், ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கலாம். வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.201611301018310938 Pineapple use to skin beauty SECVPF

Related posts

குளிர் காலத்தில் சருமம் வறட்சியடையாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்…..

nathan

உங்கள் துணை கொடுத்த முத்தத்தால் சருமத்தில் தழும்பு விழுந்துவிட்டதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா இதை அக்குளில் தடவினால், கருமை போவதோடு, ஷேவ் பண்ணவே அவசியமிருக்காது…!

nathan

பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!

nathan

தக. தக. தக்காளி! பள. பள. மேனி

nathan

பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க…

nathan

சருமத்திற்கு இத்தனை அழகை தரும் பூக்கள்

nathan

பரு, கருந்திட்டு, கருவளையம்… அசத்தல் தீர்வுகள்! அழகு குறிப்புகள்!!

nathan

முட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு டைரியில் இடம் பெறட்டும்:

nathan