கூந்தல் நுனி உடைந்து மெலிகிறதா? அதுவும் குளிர்காலத்தில் அதிகப்படியான வறட்சியையும், முடிஉதிர்தலையும் ஒரு சேர பார்ப்பீர்கள்.
இதனை பாதுகாக்க கண்டிப்பாக கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும். இதனால் கூந்தல் பிரச்சனைகளை தடுக்கலாம். இல்லையெனில் முடி வளர்ச்சியை எப்போதுமே இழக்க நேரிடும்.
கடைகளில் வாங்கும் கண்டிஷனர்களில் கெமிக்கல் கலக்காலம் செய்யவே முடியாது. அவை கூந்தலின் நுனிகளுக்கு மட்டும் தான் போக முடியும். ஸ்கால்ப்பில் போட்டால் முடி கொத்தாக உதிரும்.
கூந்தல் வளர்ச்சிக்கு முக்கியம் முடியின் வேர்க்கால்கள்தான். அங்கே ஊட்டம் தராமல், கூந்தலின் நுனிகளில் போஷாக்குன் தருவதால் என்ன பயன்.
இயற்கையாக உபயோகிக்கும் எந்த வித கண்டிஷனரும். கூந்தலை பாதுகாக்கின்றன. இயற்கை எண்ணெயை தூண்டி, வெளிப்புற மாசுவிலிருந்து காக்கின்றன.
அப்படி இயற்கையான கண்டிஷனரை எப்படி தயார் செய்யலாம் என பார்க்கலாம். இந்த கண்டிஷனரை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், முடி உதிர்தல் பிரச்சனையே வராது. மிருதுவான மின்னும் கூந்தல் கிடைக்கும்.
கண்டிஷனர் செய்ய தேவையானவை :
முட்டை – 1 தேன் – 2 ஸ்பூன் பால் – கால் கப் ஆலிவ் எண்ணெய் – கால் கப் ஏதாவது ஒரு கூந்தல் தைலம் – சிறிதளவு
முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதில் தேன், பால் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஏதாவது தரமான கூந்தல் எண்ணெயை சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இவற்றை தலையில் வேர்கால்களிலிருந்து, நுனி வரை தடவி 1 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் நல்ல தரமான ஷாம்பு கொண்டு அலசவும்.
வாரம் ஒரு முறை செய்தால் உங்கள் முடி பஞ்சு போன்று மிருதுவாகியிருப்பதை பார்ப்பீர்கள். முடி வளர்ச்சி அதிகரித்து அடர்த்தியாய் மாறும்.