30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
23 1469261554 6 makeup
முகப் பராமரிப்பு

இவைகளால் தான் கரும்புள்ளிகள் வருகிறது என்பது தெரியுமா?

சிலருக்கு மூக்கைச் சுற்றி சொரசொரப்பாகவும், சிறு புள்ளிகளாகவும் இருக்கும். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? நாம் அன்றாடம் செய்யும் சிறு தவறுகள் தான் இதற்கு காரணம். கரும்புள்ளிகளைப் போக்குவதற்கான வழிகளைத் தடுவதற்கு பதிலாக, அது எதற்கு வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டால், கரும்புள்ளிகள் வருவதையே தடுக்கலாம் அல்லவா!

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கரும்புள்ளிகள் வருவதற்கான சில காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, கரும்புள்ளிகளில் இருந்து விடுபடுங்கள்.

குளித்து முடித்த பின் முகம் கழுவாமல் இருப்பது தலைக்கு குளித்து முடித்த பின், இறுதியில் பலர் நீரால் தனியாக முகத்தைக் கழுவமாட்டார்கள். இப்படி கழுவாமல் இருப்பதால், கண்டிஷனர் அல்லது ஷாம்புகள் சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தி, பின் கரும்புள்ளிகளை வரவழைக்கிறது. எனவே கரும்புள்ளிகள் வராமல் இருக்க வேண்டுமானால், குளித்து முடித்த பின் இறுதியில் நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

அழுக்கு தலையணை உறை தலையணை உறையை பல வாரங்களாக் பயன்படுத்தி வந்தால், அதனால் முகத்தில் அழுக்குகளின் தேக்கம் மேன்மேலும் தான் அதிகரிக்கும். எனவே மூன்று நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் தலையணை உறையை மாற்றுங்கள்.

தலைமுடி பராமரிப்பு பொருட்கள் தலைமுடி பராமரிப்பு பொருட்களை உங்களின் முடியை மென்மையாக பட்டுப் போன்று காட்டலாம். ஆனால் அதனை அதிகம் பயன்படுத்தினால், முகத்தில் பருக்கள் வரும் என்பது தெரியுமா? அதிலும் தலைமுடிக்கு செரம் அல்லது ஜெல்களைப் பயன்படுத்தினால், முடி முகத்தில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் முகத்தில் கையை வைக்கும் முன் கைகளை நன்கு நீரில் கழுவுங்கள்.

போர் நீர் போர் நீரில் தாதுஉப்புக்கள் அதிகம் இருக்கும். போர் நீரால் முகத்தை அதிகமாக கழுவும் போது, அது சருமத்துளைகளை அடைத்து, கரும்புள்ளிகளுக்கு வழிவகுக்கும். எனவே போர் நீரைக் கொண்டு முகத்தை அதிகம் கழுவாதீர்கள். முடிந்த வரை நீரை நன்கு சுத்திகரித்து பின் அந்நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

மேக்கப்புடன் உடற்பயிற்சி செய்வது உடற்பயிற்சி செய்யும் போது முகத்தில் மேக்கப் இருந்தால், முதலில் அதனை நீக்குங்கள். ஏனெனில் உடற்பயிற்சியின் போது வியர்வை வெளியேறுவதால், அப்போது முகத்தில் மேக்கப் இருப்பின், சருமத்துளைகள் அடைபட்டு, நாளடைவில் அது கரும்புள்ளிகளை மட்டுமின்றி, முகப்பருக்களையும் உண்டாக்கும். எனவே எப்போதும் உடற்பயிற்சியின் போது மேக்கப் போடாதீர்கள்.

எண்ணெய் பசை மேக்கப் முகத்திற்கு எண்ணெய் பசை மேக்கப்பைப் போட்டு, தினமும் முகத்தை சரியாக கழுவாமல் இருந்தால், அதனால் கரும்புள்ளிகள் வரக்கூடும்.

மேலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும், கரும்புள்ளிகள் அதிகம் வரும். இவர்கள் வாரத்திற்கு 3-4 முறை முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

23 1469261554 6 makeup

Related posts

அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து! இதை மட்டும் பயன்படுத்துங்கள்..

nathan

வெயில் கொடுமை தாங்கமுடியலையா? அப்ப இத படிங்க!

nathan

நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கான 6 எளிய வழிகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

சருமம் பிரச்சனைகளை நீக்கி, முகம் பொலிவாகவும், அழகாகவும் இத செய்யுங்கள்!…

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே லிப் ஸ்க்ரப் தயாரிக்கலாம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை

nathan

உதடுகளை அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றுவது எப்படி என்று தெரியுமா?

nathan

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க வீட்டு குறிப்புகள்!

nathan

புருவ முடி வளர்ச்சிக்கு

nathan