கண்கள் அழகாய் இருந்தாலும், அதனை எடுப்பாக காண்பிக்க புருவ வடிவம் மிக அவசியம். கரடுமுடுரடான புருவத்தை சீர்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், புருவம் இல்லாதவர்களும் த்ரெட்டிங் செய்தால், புருவ வளர்ச்சி ஏற்படும். அழகான புருவம் பெறவும், எந்த மாதிரியான முகத்திற்கு எந்த புருவ வடிவம் நன்றாக இருக்கும் என பார்க்கலாம்.
திரெட்டிங் : புருவங்களை எப்போதும் திரெட்டிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த சருமம் சுருங்கித் தொங்க நேரிடும். த்ரெட்டிங்க் செய்யும் போது முகத்தின் அமைப்பிற்கு தகுந்தாற்போல் செய்தால் முகம் வசீகரிக்கும்.
முட்டை வடிவம் இருப்பவர்களுக்கு புருவங்கலை சற்று வளைத்தாற்போல் செய்து கொள்ளலாம். அழகாய் காண்பிக்கும்.
சதுர முகம் உடையவர்கள் பிறை போன்று புருவத்தை திருத்திக் கொள்ளுங்கள். இது வட்ட வடிவ முகத்தை காண்பிக்கும்.
சிலருக்கு புருவம் கீழ் நோக்கி அல்லது நேராகஅமைந்திருக்கும். அவர்கள் புருவத்தை சற்று வளைத்து திருத்திக் கொள்ள வேண்டும்.
பெரிய முகம் இருப்பவர்கள் புருவத்தை மெல்லிய கோடுகளாக காண்பித்தால், முகம் அழகாய் இருக்கும். அதேபோல் சிறிய முகம் இருப்பவர்களுக்கு அடர்த்தியான புருவமாக திருத்திக் கொண்டால் ஈர்க்கும்.
நீள முகம் கொண்டவர்கள் அடர்த்தியான புருவம் வைத்திருங்கள். சற்று மூக்கின் தண்டு வரை தாழ்ந்து இருந்தால் இன்னும் வசீகரமாக இருக்கும்.
விளக்கெண்ணெய் : புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெய்யும், ஆலிவ் எண்ணெய்யும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் உள்பட ஏதேனும் ஒரு எண்ணையை கலந்து மசாஜ் செய்யலாம்.
அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, புருவம் வளர ஆரம்பிக்கும். எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விடவேண்டும். இது புருவம் வளர சின்ன உத்தி.
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பாலை ஊற்றி அதில் பஞ்சை நனைத்து புருவங்களில் மெதுவாக தடவவும். சிறிது கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.
வெங்காய சாற்றினை தினமும் இரவில் புருவத்தின் மீது வளைந்த வடிவில் தடவுங்கள். அதே வடிவில் புருவம் வளர ஆரம்பிக்கும். எலுமிச்சை தோலை தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு நாள் முழுவதும் ஊற விடுங்கள்.பின்னர் அந்த எண்ணெயை புருவத்தில் தேய்த்தால் வேகமாக புருவம் வளரும்.