29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
20 1469000289 8 honey rose water
உதடு பராமரிப்பு

உதட்டைச் சுற்றி புண்ணா இருக்கா? அதை விரைவில் சரிசெய்ய இதோ சில டிப்ஸ்…

தற்போது காலநிலை மிகவும் மோசமாக உள்ளது. இப்படி காலநிலை மாறும் போது பலருக்கு உதடுகளில் வெடிப்புக்கள் மற்றும் கடுமையான வறட்சி ஏற்படக்கூடும். உதட்டில் வெடிப்புக்கள் இருந்தால், எதையும் சாப்பிட முடியாது, குடிக்க முடியாது, ஏன் சிரிக்க கூட முடியாது. உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதற்கு காலநிலை மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் உள்ளன.

அவை வைட்டமின் பி குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு, உடல் வறட்சி, அதிகப்படியான சூரியக்கதிர்களின் தாக்கம், கெமிக்கல் பொருட்களின் உபயோகம் போன்றவைகளாலும் உதடுகளில் வறட்சி உண்டாகி வெடிப்புக்கள் ஏற்படலாம்.

சரி, இப்போது உதடுகளில் வரும் வெடிப்புக்களை எப்படி சீக்கிரம் போக்குவது என்று பார்ப்போம். குறிப்பாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகள் அனைத்தும் இயற்கையானவை என்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

தேன் உதடுகளில் வறட்சி அதிகம் ஏற்படுவது போல் இருந்தால், தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தேன் தடவுங்கள். இதனால் உதட்டின் ஈரப்பசை அதிகரிப்பதோடு, உதட்டில் இருக்கும் கருமை நீங்கி, உதடு அழகாகும்.

நெய் நெய்யும் தேனைப் போன்ற பலனைத் தரும். அதற்கு தூங்கும் முன் சிறிது நெய்யை உதட்டில் தடவ வேண்டும். இதனால் வறட்சி மற்றும் வெடிப்புகள் நீங்குவதோடு மென்மையான உதட்டையும் பெறலாம்.

க்ரீன் டீ
க்ரீன் தயாரித்த பின், அந்த பை அல்லது அதன் இலைகளைத் தூக்கிப் போடாமல், அதனைக் கொண்டு 4 நிமிடம் உதட்டை மசாஜ் செய்தால், உதட்டில் ஈரப்பசை அதிகரித்து, வெடிப்புகள் மறையும்.

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். மேலும் இது ஆன்டி-பாக்டீரியல் தன்மைகளையும் உள்ளடக்கியது. அத்தகைய சுத்தமான தேங்காய் எண்ணெயை ஒருவர் தினமும் பலமுறை உதட்டில் தடவி வந்தால், உதட்டின் ஆரோக்கியம் மற்றும் அழகு மேம்படும்.

ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன், உதடு மற்றும் முகத்தில் தடவி வந்தால், ஐந்தே நாட்களில் முகம் மற்றும் உதடு பிரச்சனைகளின்றி பொலிவோடும் அழகாகவும் இருப்பதைக் காணலாம்.

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அத்தகைய வெள்ளரிக்காயின் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து, அதனை உதட்டில் தடவி 20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி உதடு வறட்சி மற்றும் வெடிப்பு இருக்கும் போது செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரை 1/2 டீஸ்பூன் சர்க்கரையுடன் 2 துளி ஆலிவ் ஆயில் கலந்து, உதட்டில் தடவி 3-5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, நீரில் கழுவ வேண்டும். பின் உதட்டில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால், உதட்டில் இருந்த இறந்த செல்கள் வெளியேறி, உதடு அழகாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

தேன் மற்றும் ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, உதட்டில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டில் உள்ள கருமை மற்றும் வறட்சி நீங்கி, உதடுகள் அழகாக இருக்கும்.

20 1469000289 8 honey rose water

Related posts

உதடு வறண்டு உதடு வெடிக்கின்றதா?

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

பூனை முடி உதிர…

nathan

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன….

sangika

உதடு சிவப்பாக மாற

nathan

கண்டிப்பாக வியப்பீர்கள்! உதடு சிவப்பா மாறணுமா? உங்கள் வீட்டிலுள்ள சீனியுடன் இதை கலந்து போடுங்கள்.

nathan

இந்த 3 வகையான லிப் பாம் தான் உங்கள் உதட்டை பாழாக்கும்!!

nathan

லிப்ஸ்டிக் இதுவரை தெரியாத ஆச்சர்யங்கள்

nathan

உங்களுக்கு லிப்ஸ்டிக் எப்படி போடணும் என தெரியுமா?

nathan