கருவளையங்கள், கண் முடிவில் சுருக்கங்கள் போன்ற இந்த பாதிப்புகளிலிருந்து கண்ணை சுற்றிய சருமத்தைப் பாதுகாக்க பின்வரும் அறிவுரையை பின்பற்றுங்கள்.
கண்களை சுற்றியுள்ள சருமத்தை பராமரிப்பது எப்படி?
கண்ணைச் சுற்றிய பகுதி மற்ற பகுதியை விட மெலிதாகவும் எண்ணெய் சுரப்பிகள் குறைவாகவும் கொண்டதாக இருப்பதால் இங்குள்ள தசை நார்கள் உடைந்து கண்களைச் சுற்றிய பகுதி தளர்வாகவும் சோர்ந்து பொலிவின்றியும் காணப்படும்.
கருவளையங்கள், தொய்வடைந்த இமைகள், கண் முடிவில் சுருக்கங்கள் போன்ற இந்த பாதிப்புகளிலிருந்து முடிந்த வரை கண்ணை சுற்றிய சருமத்தைப் பாதுகாக்க பின்வரும் அறிவுரையை கேளுங்கள்.
வெள்ளரிக்காயில் நிறைய நீர்ச்சத்தும் ஆன்டிஆக்சிடெண்டுகளும் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் சேர்ந்துள்ள நச்சுக்களை களைந்து நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகின்றன. வெள்ளரியில் இரு மெல்லிய துண்டுப்பட்டைகளை வெட்டி அதை பத்து நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து பின்னர் அதை கண்கள் மீது வையுங்கள். இந்த குளுமை நீங்கும் வரை வைக்கவும். இதை தினமும் செய்வதால் கண்களைச் சுற்றியுள்ள சோர்வடைந்த சருமம் புத்துணர்வு பெறும்.
உருளைக் கிழங்கை தோலுரித்து துருவி அதை சாறாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஃபிரிட்ஜில் 10 நிமிடம் வைத்து பின்னர் அதை கண்ணை சுற்றித் தடவி மசாஜ் செய்யவும். பின்னர் ஒரு இருபது நிமிடம் கழித்து ஒரு ஈரமான துணி கொண்டு துடைத்தெடுக்கவும்.
நீங்கள் தினமும் பயன்படுத்தும் இந்த க்ரீன் டீ பைகள் ஆண்டிஆக்சிடென்டுகள் மற்றும் டானின் நிறைந்து காணப்படுவதால் இவை உங்கள் தோய்ந்த கண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது இரண்டு உபயோகித்த டீ பாக்கெட்டுகளை (டீ பேக்) எடுத்து அதிலுள்ள அதிக நீரை வடித்து விடுங்கள். அதை ஃபிரிட்ஜில் பத்து நிமிடம் வைத்து பின்னர் அதை கண்கள் மீது வைத்திடுங்கள். அதன் குளுமை போகும் வரை வைத்து பின்னர் எடுத்து விடுங்கள்.