என்னென்ன தேவை?
மைதா மாவு – 2 கப்,
(அல்லது பஞ்சாப் ஆட்டா மாவு),
சர்க்கரை – 1 கப்,
சர்க்கரை தூள் – 1 கப்,
ஏலக்காய், ஜாதிக்காய் – தலா ஒரு சிட்டிகை,
குங்குமப் பூ – சிறிதளவு,
நெய் – பொரிப்பதற்கு,
பிஸ்தா, பாதாம்,
முந்திரி, அக்ரூட் எல்லாம்
சேர்ந்து – கப்,
பால் பவுடர் – கப்.
எப்படிச் செய்வது?
மைதா மாவை சலித்து இத்துடன் சர்க்கரை, ஏலக்காய், ஜாதிக்காய், பாலில் கரைத்த குங்குமப் பூ, பால் பவுடர், சூடாக்கிய அரை கப் நெய் சேர்த்து கலந்து அத்துடன் உடைத்து நெய்யில் வறுத்த பிஸ்தா வகையறாக்களைச் சேர்த்து உருண்டை பிடிக்கவும். இது உதிரக்கூடாது. மைதா மாவை கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பின் ஒரு பெரிய எலுமிச்சைப் பழ அளவு எடுத்து தட்டை போல் சிறிது கனமாக ( இஞ்ச்) தட்டி சூடான நெய்யில் மிதமான தீயில் பொரித்து எடுத்து வடித்து அதன் மேல் சர்க்கரை தூள் தூவி விடவும்.