என்னென்ன தேவை?
அரிசி – 1 கப்,
கத்தரிக்காய் – 4,
பெரிய வெங்காயம் – 1,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
கடுகு – ½ டீஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
உப்பு – சிறிதளவு,
முந்திரிப்பருப்பு – தேவையான அளவு.
பேஸ்ட் செய்ய…
காய்ந்த மிளகாய் – 3,
மல்லி – 1 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்,
உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு கிராம்பு – 2,
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
எப்படி செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், மல்லி, கடலைப்பருப்பு, உளுந்து, பட்டை, கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, இறுதியில் தேங்காய்த் துருவலைப் போட்டு லேசாக வதக்கி, உப்பு சேர்த்து அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். அரிசியை சாதமாக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை பொடியாகவும், கத்தரிக்காயை நீளமாகவும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து, தாளித்து கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். உளுந்து பொன்னிறமானதும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து கிளறுங்கள். பின் அதில் கத்தரிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து கத்தரிக்காய் மிருதுவாகும் வரை நன்கு வதக்குங்கள். வதங்கியதும் தயாரித்து வைத்துள்ள பேஸ்டைப் போட்டு நன்கு கிளறுங்கள். இறுதியாக, இதில் சாதத்தையும் முந்திரியையும் சேர்த்து, நன்கு சேரும்படி கலந்து பறிமாறுங்கள்.