26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
18 1468832651 4 heredity
தலைமுடி சிகிச்சை

இவைகளும் உங்கள் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் என்பது தெரியுமா?

ஒவ்வொரு முறை தலையை சீவும் போதும் கையில் கொத்தாக முடி வருகிறதா? அதைப் பார்க்கும் போதெல்லாம் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகிறீர்களா? எவ்வளவு முயற்சித்தும் தலைமுடி உதிர்வதை தடுக்க முடியவில்லையா? முதலில் இக்கட்டுரையைப் படியுங்கள்.

தலைமுடி உதிர்வதை நிறுத்த வேண்டுமானால், அதற்கான காரணத்தை முதலில் அறிய வேண்டும். அதில் பலருக்கும் தெரிந்த காரணங்கள் மோசமான தலைமுடி பராமரிப்பு, அதிகப்படியான தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, வறட்சி, பொடுகு போன்றவை.

ஆனால் அதையும் தாண்டி வேறுசில காரணங்களும் உள்ளன. அதில் சில பலருக்கு தெரியாதவைகளாகும். சரி, இப்போது நீங்கள் அறிந்திராத தலைமுடி உதிர்வதற்கான வேறுசில காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் ஒருவர் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளான விபத்து, பிடித்தவர்களின் இறப்பு போன்றவற்றால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானால், அதன் காரணமான மன இறுக்கம் ஏற்பட்டு, தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.

வைட்டமின் ஏ மாத்திரைகள் வைட்டமின் ஏ குறைபாடு உள்ளது என்று, வைட்டமின் ஏ மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்து வந்தால், மயிர்கால்கள் பலவீனமாகி, தலைமுடி உதிர்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

புரோட்டீன் குறைபாடு ஆரோக்கியமான தலைமுடிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்து. புரோட்டீன் தான் தலைமுடியின் வலிமைக்கு காரணம். அதன் குறைபாடு ஏற்பட்டால், அதிகப்படியான முடியை இழக்க வேண்டிவரும்.

பரம்பரை சில நேரங்களில், மரபணுக்களும் தலைமுடி உதிர்வதற்கு காரணமாக இருக்கும். உங்கள் பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டிகளுக்கு வழுக்கை தலை இருந்தால், உங்களுக்கும் வழுக்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் முதல் கட்டமாக தலைமுடி அதிகம் உதிர ஆரம்பிக்கும்.

திடீர் எடை குறைவு கடுமையான டயட்டை மேற்கொண்டு, குறைந்த காலத்தில் அதிகளவு உடல் எடையைக் குறைத்தால், ஊட்டச்சத்து குறைபாட்டினால் மயிர்கால்கள் பலவீனமாகி, உதிர ஆரம்பிக்கும்.

நாள்பட்ட காய்ச்சல் காய்ச்சலால் 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் அவஸ்தைப்பட்டு வந்தால், அதன் காரணமாகவும் தலைமுடி அதிகம் உதிரும். எனவே காய்ச்சல் வந்தால், சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை நிறைய பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு, பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுப்பார்கள். இப்படி இந்த மாத்திரைகளை அதிகமாக எடுத்த பல பெண்களின் உடலில் திடீர் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, நிறைய முடி கொட்டியுள்ளது.

18 1468832651 4 heredity

Related posts

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?

nathan

ட்ரை பண்ணுங்களேன்… முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்..

nathan

சூப்பர் டிப்ஸ்.. கீழ ஊத்தற இந்த தண்ணி முடிய நீளமாவும் அடர்த்தியாவும் வளர வைக்கும் தெரியுமா?

nathan

தலைமுடியின் வளர்ச்சியை வேகமாக்கும் இந்த ஷாம்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா?

nathan

பெண்களே நீளமான கூந்தல் வேண்டுமா? அப்ப சீகைக்காய் யூஸ் பண்ணுங்க…

nathan

கூந்தலுக்கு எண்ணெய் அவசியமா?

nathan

நரைமுடியை இயற்கை முறையில் கருமையாக்க இத அடிக்கடி யூஸ் பண்ணுங்க…

nathan

கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்

nathan