omapodi 27 1453896607
​பொதுவானவை

ஓம பொடி

ஸ்நாக்ஸ்களில் ஓம பொடி பலருக்கும் பிடித்த ஒன்று. அதை நீங்கள் நினைத்த நேரங்களில் எல்லாம் சாப்பிட ஆசைப்பட்டால், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். மேலும் ஓம பொடி காரம் இல்லாததால், குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு ஓம பொடி எப்படி செய்வதென்று தெரியாதா?

அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு ஓம பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கப் அரிசி மாவு – 1/4 கப் ஓமம் – 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கையளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், சூடான எண்ணெய், பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஓமத்தை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி, பிசைந்து வைத்துள்ள மாவில் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு சிறு துளையுள்ள முறுக்கு உழக்கில், சிறிது வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கை மூடி எண்ணெயில் நேரடியாக பிழிய வேண்டும். பின்பு பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். இதுப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் கறிவேப்பிலையை அந்த எண்ணெயில் போட்டு பொரித்து, ஓம பொடியுடன் சேர்த்து, கையால் உதிர்த்துவிட்டால், ஓம பொடி ரெடி!!!

omapodi 27 1453896607

Related posts

கத்திரிக்காய் தொக்கு – Brinjal Thokku

nathan

வெந்தயக் கீரை ரசம்

nathan

சீஸ் பை

nathan

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

nathan

‘அரியும்’ முன் அறிந்து கொள்வோம்!!

nathan

நீங்கள் ரசத்தை விரும்பாதவரா? அப்ப இதை படிங்க….

nathan

Kamarajar History in Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு

nathan

கம்பு வெஜிடபிள் கஞ்சி

nathan

பைனாபிள் ரசம்

nathan