30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
chilli chicken gravy 02 1456903752
அசைவ வகைகள்

சில்லி சிக்கன் கிரேவி

உங்கள் வீட்டில் மதிய வேளையில் வெஜிடேபிள் பிரியாணி செய்து, அத்துடன் ஏதேனும் சிக்கன் கிரேவி செய்து சாப்பிட நினைத்தால், சில்லி சிக்கன் கிரேவி செய்து சுவையுங்கள். இது வித்தியாசமாக இருந்தாலும், அற்புதமான ருசியில் இருக்கும். மேலும் இதை செய்வது மிகவும் ஈஸி.

இங்கு சில்லி சிக்கன் கிரேவியை எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று கூறுங்கள். முக்கியமாக இந்த சில்லி சிக்கன் கிரேவி சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – 2 டீஸ்பூன் தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது) வினிகர் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனுடன் 1/2 டீஸ்பூன் சோயா சாஸ், வினிகர், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். எஞ்சிய எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறி, பொரித்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து, எவ்வளவு கிரேவி வேண்டுமோ, அவ்வளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் சிறிது நீரில் சோள மாவை சேர்த்து கலந்து, கிரேவியுடன் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சில்லி சிக்கன் கிரேவி ரெடி!!!

chilli chicken gravy 02 1456903752

Related posts

சூப்பரான மட்டன் கொத்துகறி அடை செய்வது எப்படி

nathan

சன்டே ஸ்பெஷல்: சிக்கன் குழம்பு

nathan

சூப்பரான பேசில் தாய் சிக்கன்

nathan

சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ்

nathan

அயிரை மீன் குழம்பு செய்ய தெரியுமா…?

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

நெத்திலி மீன் கிரேவி

nathan

சிக்கன் கிரீன் கிரேவி:

nathan

Easy சிக்கன் 65 : செய்முறைகளுடன்…!

nathan