23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
oil 13 1468409135
சரும பராமரிப்பு

உங்களுக்கு அழகை அள்ளித் தரும் 6 அற்புத எண்ணெய்கள் !!

சருமம் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்க நீங்கள் விரும்பாமல் இருக்க மாட்டீர்கள். எண்ணெய் தெரபி செய்வதன் மூலம் எண்ணெய் உங்கள் சரும துளைகளுக்குள் ஊடுருவி, உங்கள் அழகிற்கு மேலும் பொலிவை தரும்.

அதனால்தான் அந்த காலத்தில் எண்ணெய் குளியல் வாரம் ஒருமுறை மேற்கொண்டார்கள். எண்ணெய் உங்களின் ஒவ்வொரு செல்லிற்கும் போஷாக்கு அளித்து, பலம் தரும்பவை.

சருமத்தை இறுகச் செய்து, தளர்வடையாமல் காப்பதில் எண்ணெய்களுக்கு முக்கியபங்கு உண்டு. அதேபோல் போதிய ஈரப்பதம் அளிக்கும். இளமையை நீடிக்கச் செய்யும். அப்படியான எண்ணெய்களின் மகத்துவத்தை காணலாம்.

ரோஜா எண்ணெய் : ரோஜா எண்ணெய் சருமத்தை சுத்தம் செய்யும். சுருக்கங்கள் மறைந்துவிடும். வாரம் ஒருமுறை ரோஜா எண்ணெயை உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால், ரோஜா நிறம் பெறுவீர்கள்.

பாதாம் எண்ணெய் : இது மிகச் சிறந்த சரும எண்ணெயாக கூறப்படுகிறது. இது வேகமாக சருமத்திற்குள் உறிஞ்சப்படும். உங்களை இளமையாக காண்பிக்கும். மிருதுவான சருமம், கிடைக்கும்.

ஆப்ரிகாட் எண்ணெய் : ஆப்ரிகாட் பழத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த எண்ணெய், அதிகமாக விட்டமின் ஈ கொண்டுள்ளது. சரும பாதிப்புகளை சரி செய்யும். எளிதில் உறியும். தினமும் உடலில் மசாஜ் செய்து குளித்தால் பொலிவான சருமம் பெறுவீர்கள்.

ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெய் நிறமளிக்கும். சூரியக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும். ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால், சுருக்கங்களை விடைப்பெறச் செய்கிறது.

லாவெண்டர் எண்ணெய் :
இது எல்லாவித சருமத்திற்கும் சிறந்தது. பாக்டீரியா எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது. முகப்பருக்களை மறையச் செய்துவிடும்.

நல்லெண்ணெய் :

நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி தரும். மினுமினுப்பை தரும். சுருக்கங்களை போக்கி, முகத்திற்கு புதிய தேஜஸை தரும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை தேய்த்து குளித்தால், மென்மையான இளமையான தோற்றம் கிடைக்கும்.oil 13 1468409135

Related posts

கிர்ணி பழ பேஸ்பேக் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது

nathan

அழகான சருமம் வேண்டுமா? இந்த பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

எண்ணெய் பசை சருமத்திற்கான, இந்திய வீட்டு அழகு குறிப்புகள்

nathan

உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்திற்கு வாரம் ஒருமுறை இதை செய்தால் போதும் முயன்று பாருங்கள்!

nathan

பிட்டத்தில் உள்ள அசிங்கமான பருக்களைப் போக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

nathan

வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை பராமரிப்பது எப்படி?

sangika

நலங்கு மாவு பொன் நிற மேனிக்கு…..அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது

nathan

சீனப் பெண்களின் அழகின் ரகசியங்கள் தெரிஞ்சுக்கனுமா? இத படிங்க!

nathan