24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
bread beetroot balls 23 1456227484
சிற்றுண்டி வகைகள்

பிரட் பீட்ரூட் பால்ஸ்

மாலையில் எப்போதும் பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிடாமல், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஏதாவது ஒரு காய்கறிகளைக் கொண்டு வித்தியாசமான முறையில் சமைத்து சாப்பிடலாம் அல்லவா? இங்கு பீட்ரூட் கொண்டு செய்யப்படும் ஓர் அற்புதமான சமையல் கொடுக்கப்பட்டுள்ளது.

அது தான் பிரட் பீட்ரூட் பால்ஸ். இது மாலையில் சாப்பிட ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. சரி, இப்போது பிரட் பீட்ரூட் பால்ஸ் ரெசிபியை எப்படி வீட்டிலேயே எளிமையாக செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: பிரட் – 10 உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்தது) வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பீட்ரூட் – 1 கப் (துருவியது) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + வறுப்பதற்கு தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் துருவிய பீட்ரூட்டை சேர்த்து, உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, பின் மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து பிரட்டி இறக்கி, குளிர வைத்து, அக்கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, அதனை பக்கவாட்டில் உள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, வெள்ளைப் பகுதி நீரில் நனைத்து பிழிந்து ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பிரட் கலவையை, எத்தனை பீட்ரூட் உருண்டைகள் உள்ளதோ, அந்த அளவில் சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பின் பிரட் உருண்டையை எடுத்து, தட்டையாக தட்டி, அதன் நடுவே பீட்ரூட் உருண்டையை வைத்து மூட வேண்டும். இப்படி அனைத்தையும் செய்ய வேண்டும். அடுத்து அந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சோள மாவில் பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு அகன்ற வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பிரட் பீட்ரூட் பால்ஸ் ரெடி!!!

bread beetroot balls 23 1456227484

Related posts

ஒப்புட்டு

nathan

சுவையான மசால் தோசை

nathan

அவல் புட்டு

nathan

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

சுவையான இறால் வடை செய்வது எப்படி

nathan

தஹி பப்டி சாட்

nathan

சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி

nathan

தினை இனிப்புப் பொங்கல்

nathan

ஹாட் அண்ட் சோர் ராகி கேக்ஸ்

nathan