அவகேடோவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது அவகேடோவை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான அவகேடோ சப்பாத்தி
தேவையான பொருட்கள் :
அவகேடோ கூழ் – ஒரு கப்,
கோதுமை மாவு – 2 கப்,
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
வெங்காயம் – 2
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், நெய் – தலா – 2 டீஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சீரகத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, வெங்காயம், அவகேடோ கூழ் ஆகிவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
* பிசைந்து வைத்த மாவை வட்ட வடிவத்தில் திரட்டவும்.
* தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, உருட்டி வைத்த சப்பாத்தியை போட்டு, இரு புறமும் சிவந்ததும், சிறிது நெய் தடவி எடுத்துப் பரிமாறவும்.
* சுவையான சத்தான அவகேடோ சப்பாத்தி ரெடி.