eyes 12 1468303052
கண்கள் பராமரிப்பு

ஈர்க்கும் கண்களைப் பெறுவது எப்படி எனத் தெரியுமா?

கண்கள் சிறியதோ, பெரியதோ, அவற்றில் ஈர்ப்பு இருந்தாலே ரசிக்கும்படி இருக்கும். கண்கள் சோர்வாக இருந்தால் நீங்கள் கண்ணாடியில் சற்று உற்றுப் பாருங்கள். கண்களில் வறட்சி தென்படும். சுருங்கியிருக்கும். கண்களில் ஜீவனே இருக்காது. அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் தெரிந்து கொண்டு அதனை சரிசெய்யுங்கள்.

இந்த காலங்களில் வேலை, கணிப்பொறி மொபைல் ஆகியவற்றை தவிர்க்க முடியாதுதான். ஆனால் தகுந்த ஈரப்பதம் அளித்து பராமரித்தால், எப்படியான சுமார் கண்களிலும் ஒரு ஈர்ப்பு வருவது முற்றிலும் உண்மை. நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்களேன்.

பால் கிளென்ஸர் : கண்களை சுத்தப்படுத்துவது மிக முக்கியம் முகத்தில் முதலில் தூசுகள் தாக்குவது கண்களில்தான்.ஆகவே தினமும் காலையில் உள்ளங்கைகளில் சுத்தமான வெதுவெதுப்பான நீர் எடுத்து கண்களை அமிழ்த்த வேண்டும். இவ்வாறு செய்தால், கண்களுக்குள் இருக்கும் தூசு, அழுக்குகள் நச்சுக்கள் வெளிவந்துவிடும். கண்களுக்கு வெளியே காய்ச்சாத பாலினைக் கொண்டு சுத்தம் செய்யலாம். சிறிது பஞ்சை எடுத்து, பாலில் நனைத்து, கண்களை சுத்தம் செய்யலாம். இதனால் அன்று முழுவதும் கண்கள் பளீரென்று இருக்கும்.

சோம்பு நீர் : ஒரு ஸ்பூன் சோம்பினை எடுத்து ஒரு கப் சுத்தமான நீரில் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.இவற்றை கண்களுக்குல் சில சொட்டுக்கள் விட வேண்டும். கண்களில் உள்ல அழுக்குகள் வெளியேறி பளபளப்பான கண்கள் பெறுவீர்கள்.

வெள்ளரி+ உருளை+ மஞ்சள் கலவை : வெள்ளரி ஒரு துண்டு, உருளைக் கிழங்கு இரு துண்டு, எலுமிச்சை சாறு சில சொட்டுக்கள், கால் ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை எடுத்து, மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

இவற்றை கண்களில் பத்து போல போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். கழுவியவுடன் உங்கள் கண்கள் பளபளப்பதை உடனடியாக பார்ப்பீர்கள். கருவளையமும் நாளடைவில் மறைந்து போய்விடும். வாரம் இருமுறை இவ்வாறு செய்யலாம்.

ஸ்ட்ரா பெர்ரி : ஸ்ட்ரா பெர்ரி கண்களுக்கு அடியில் உண்டாகும் வீங்கிய சதை, சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கும். ஒரு ஸ்ட்ரா பெர்ரி பழத்தை சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து, பின்னர் எடுத்து, அதன் சில்லிடும் தோலினை நீக்கவும். பிறகு அதனை வட்ட துண்டுகளாக வெட்டி கண்களின் மேல் வைக்கவும். இளமையான கண்கள் தரும்.

தேன் : சுத்தமான தேனை கண்களுக்குள் சில சொட்டு விடலாம். இவை இயற்கையாக நச்சுக்களை கண்களிலிருந்து வெளியேற்றும். கண்களை சுத்தம் செய்யும். கண்கள் ஜொலிக்கும்.கவர்ச்சியான கண்களைப் பெறலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்யலாம்.

டீ பேக் : க்ரீன் டீ பேக்கை எடுத்து அரை நிமிடம் வெதுவெதுப்பான நீரில் வைத்து பின் 1 நிமிடம் ஃப்ரிட்ஜில் வையுங்கள். பின்னர் அதனை எடுத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஏதாவது பார்ட்டி அல்லது விழாவிற்கு போகும்போது கண்கள் அழகாக தெரிய இது கைகொடுக்கும்.

eyes 12 1468303052

Related posts

கண்ணைச் சுற்றிக் கருவளையம்

nathan

கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!…

sangika

இமைகளை அடர்த்தியாக வளரச் செய்யும் எண்ணெய் !!

nathan

கருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி- how to clear dark cycle?

nathan

கண்களில் சுருக்கங்களை போக்கும் பெஸ்ட் ரெசிப்பிஸ் !!

nathan

கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய

nathan

அழகான புருவங்களுக்கு

nathan

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan