28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
D761745E D58D 4448 970A C4F215A93AF8 L styvpf
இனிப்பு வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் தேங்காய் பால் பணியாரம்

மாலை நேரத்தில் இந்த தேங்காய் பால் பணியாரம் சாப்பிட சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் தேங்காய் பால் பணியாரம்
தேவையான பொருட்கள் :

பச்சரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
ஏலக்காய் – 1 சிட்டிகை
சர்க்கரை – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :
D761745E D58D 4448 970A C4F215A93AF8 L styvpf

201611111423131615 coconut milk paniyaram SECVPF

* உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும்.

* அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..

* பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.

* தித்திப்பான தேங்காய் பால் பணியாரம் ரெடி."

Related posts

இனிப்பு பூந்தியுடன் தீபாவளியை கொண்டாடுங்கள்……..

sangika

சுவையான பாதாம் லட்டு

nathan

பலம் தரும் பாரம்பர்ய மிட்டாய்!

nathan

தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படி

nathan

ப்ரெட் ஜாமூன் : செய்முறைகளுடன்…!

nathan

சேமியா கேசரி: நவராத்திரி ஸ்பெஷல்

nathan

பேரீச்சை புடிங்

nathan

மாம்பழ அல்வா : செய்முறைகளுடன்…!

nathan

ரசகுல்லா செய்முறை!

nathan