23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

ட்ரை கலர் சாண்ட்விச்

sath-(dry-color-sandwich)-212ட்ரை கலர் சாண்ட்விச் தேவையான பொருட்கள்
                                ஃப்ரெட் ஸ்லைஸ்   – 3
                                தக்காளி சாஸ்                        – 2 டீஸ்பூன்
                                மேயோனைஸ் சாஸ்          – 2 டீஸ்பூன்
                                கிரீன் சட்னி                            – 2 டீஸ்பூன்
                                வெங்காயம்                           – 1
                                தக்காளி                                    – 1
                                வெள்ளரிக்காய்                     – 1
                                மிளகுத்தூள்                             – 1 டீஸ்பூன்
                                உப்பு                                           – தேவையான அளவு
                                சீஸ்                                            – 1 க்யூப் துருவியது

ட்ரை கலர் சாண்ட்விச் செய்முறை

வெங்காயம், வெள்ளரிக்காயின் தோலை எடுக்கவும். வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி முதலியவற்றை மெல்லிய ரவுண்ட் ஸ்லைசுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு ஃப்ரெட் ஸ்லைஸ் மேல் தக்காளி சாஸைத் தடவவும். இரண்டாவது ஃப்ரெட் ஸ்லைஸ் மேல் கிரீன் சட்னி தடவி அதன் மேல் வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளியை அடுக்கி மிளகுத்தூள், உப்பு, சீஸைத் தூவவும். மூன்றவாது ஸ்லைஸ் மேல் மேயோனைஸ் சாஸைத் தடவவும். மூன்று ஃப்ரெட் ஸ்லைஸையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மைக்ரோவேவில் 1 நிமிடம் பேக் செய்து சூடாகப் பரிமாறவும்.

கிரீன் சட்னி

புதினா அரை கப், கொத்தமல்லி அரை கப், பச்சை மிளகாய் 2, எலுமிச்சம் ஜுஸ் 2 டேபிள் ஸ்பூன், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதுவே கிரீன் சட்னி ஆகும்.

Related posts

சுவையான கார மிக்ச‌ர் அவலை வைத்து செய்வது எப்படி?

nathan

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் பட்டாணி கோப்தா

nathan

சத்து நிறைந்த சாமை மிளகுப் பொங்கல்

nathan

பிரெட் பஜ்ஜி செய்ய வேண்டுமா…?

nathan

நட்ஸ் டிரைஃப்ரூட்ஸ் ரிச் லட்டு

nathan

வீட்டிலேயே செய்யலாம் சுவையான தேங்காய் பிஸ்கட்

nathan

ராகி பால் கொழுக்கட்டை

nathan

பச்சை பட்டாணி கச்சோரி

nathan