25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
11 1468219015 6 olive oil
தலைமுடி சிகிச்சை

ஒரே மாதத்தில் மெலிந்த முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ்களை ட்ரை பண்ணுங்க…

தற்போது தலைமுடி பிரச்சனை என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒன்றாக உள்ளது. தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணிகள் உள்ளன. அதில் அளவுக்கு அதிகமாக உடல் மற்றும் மனம் அழுத்தத்திற்குள்ளாவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், அலர்ஜி, மோசமான தலைமுடிப் பராமரிப்பு மற்றும் தவறான தலைமுடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

என்ன தான் கடைகளில் தலைமுடி உதிர்வதற்கான பொருட்கள் விற்கப்பட்டாலும், அவற்றில் சேர்க்கப்படும் கெமிக்கல்களால் தற்காலிகமாக தலைமுடி உதிர்வது நிற்குமே தவிர, அதன் உபயோகத்தை நிறுத்தினால் அதன் உண்மையான சுயரூபம் தெரியும்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 வழிகளைப் பின்பற்றினால், முடி அதிகம் உதிர்ந்து மெலிந்திருப்பது நீங்கி, தலைமுடி ஒரே மாதத்தில் அடர்த்தியாகி இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

முதல் முறை வெண்ணெய் பழம்/அவகேடோ பாதி அவகேடோ பழத்தை எடுத்து, அதில் உள்ள சதைப்பகுதியை தனியாக ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலச வேண்டும்.

மற்றொரு முறை இல்லாவிட்டால், ஒரு அவகேடோ பழத்தின் சதைப்பகுதியை எடுத்து, அத்துடன் 1 வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, அதோடு 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

முட்டை முட்டை கூட தலைமுடி அடர்த்தியாக வளர உதவும். அதற்கு தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப 1-2 முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள வேண்டும்

மற்றொரு முறை இல்லையெனில், ஒரு ட்டையின் மஞ்சள் கருவுடன் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, அதோடு 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால், ஒரு மாதத்தில் முடி அடர்த்தியாகி இருப்பதைக் காணலாம்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேடற்றி, அந்த எண்ணெயைக் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். வேண்டுமானால் இந்த இரவு முழுவதும் நன்கு ஊற வைத்து, மறுநாள் காலையில் கூட அலசலாம்.

இல்லாவிட்டால், ஆலிவ் ஆயிலுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

11 1468219015 6 olive oil

Related posts

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?

nathan

நரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா?..

nathan

வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

nathan

வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!

nathan

வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இந்த நேச்சுரல் ஷாம்பு யூஸ் பண்ணுங்க…

nathan

கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் வகைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…நரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா?

nathan

கற்றாழை முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்கிறது!

nathan

தலைமுடியைக் கறுமையாக்கும் கரிசாலை!

nathan