31.6 C
Chennai
Monday, Jul 14, 2025
201611090943581535 spinal cord caused by the use of high heels for women SECVPF
கால்கள் பராமரிப்பு

ஹை ஹீல்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு தேய்மானம்

பெண்கள் ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால் முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்படும்.

ஹை ஹீல்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு தேய்மானம்
ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால் முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். தண்டுவட எலும்புகளில் உள்ள அனுலார் சவ்வு கிழிபட்டு முதுகு வலி பிரச்சனையை ஏற்படுத்தும். முதுகுப் பகுதியில் லம்பார் லார்டோசிஸ் வளைவை அதிகப்படுத்தி தண்டுவட எலும்புகளில் லி5, ஷி1 பகுதியில் அதிக தேய்மானம் ஏற்படுத்தி வலியை உருவாக்கவும் ஹை ஹீல்ஸ் முக்கிய காரணம்.

சிலருக்கு Intervertebral disc prolapse என்னும் தண்டுவட எலும்புகளின் நடுவே உள்ள தட்டுகள் தேய்மானம் அடைந்து முதுகுவலி ஏற்படும். ஆரம்ப கட்டத்தில் மருந்து, மாத்திரைகள், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளை கொடுத்து சரி செய்து விடலாம். பிரச்சனை வளர்ந்த நிலையில் வலி குறையாமல் இருந்தால் அறுவை சிகிச்சை செய்துதான் சரி செய்யவேண்டியிருக்கும். இப்போது பதின்ம வயது பருவப்பெண்களும் ஹை ஹீல்ஸ் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இப்பழக்கம் அவர்களின் எலும்புகளின் வளர்ச்சியை பாதித்து, இளம் வயதிலேயே கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தும் ஹை ஹீல்ஸ் தேவையா என்று இளம்பெண்கள் யோசிக்க வேண்டும்.

* பாதங்களில் வலி உள்ளவர்கள் கான்ட்ராஸ்ட் பாத் என்ற சிகிச்சையை வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீரையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதில் கணுக்கால் வரை நீரில் முக்கி பாதத்துக்கான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். இருவகை தண்ணீரிலும் மாற்றி மாற்றி பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளைகளும் செய்ய வேண்டும்.

* நீண்ட நாட்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து பழகியவர்களால் வழக்கமான செருப்புகளுக்கு உடனே மாற முடியாது. பாதங்களின் கீழ் உள்ள ஆர்ச் எனப்படும் வளைவுகள் மிகவும் குறைந்துவிடும். ஒரு இஞ்ச் அளவுள்ள ஹீல் உள்ள செருப்புகளுக்கு மாறி அதன் பிறகுதான் ஹீல் இல்லாத செருப்புகளுக்கு மாற வேண்டும்.

* குதிகால், பாதம் ஆகியவற்றுக்கு சீராக இயங்கத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

* முதுகு மற்றும் மூட்டுவலி உள்ளவர்கள் எலும்பியல் நிபுணரை ஆலோசித்த பிறகே சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

விரல்களில் ஏதேனும் வேறுபாடு தெரிந்தால் ஹை ஹீல்ஸ் அணிவதை நிறுத்திவிட வேண்டும்…

ஹை ஹீல்ஸ் காரணமாக ஏற்படும் ஒருவகை முதுகுவலி ஆரம்ப கட்டத்தைத் தாண்டிவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்…201611090943581535 spinal cord caused by the use of high heels for women SECVPF

Related posts

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்

nathan

பித்த வெடிப்பா கவலையை விடுங்கள்..!

nathan

பாதங்களில் உள்ள வெடிப்பை போக்க எளிய வழிகள்

nathan

பெண்களே உங்கள் தொடையில் அதிகபடியான சதை இருக்கிறதா?அப்ப இத படிங்க!

nathan

சொரசொரவென கருப்பான முட்டியை மாற்றும் ஒரு எளிய வழி!! வாரம் ஒருமுறை செஞ்சு பாருங்க!!

nathan

உங்களுக்கு தெரியுமா பாத பித்த வெடிப்பை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்

nathan

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்.

nathan

கால்களை ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்!!!

nathan

வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?

sangika