கூந்தல் என்றாலே பொடுகு, வறட்சி, பிசுபிசுப்பு அழுக்கு எல்லாம் வரத்தான் செய்யும். வாரம் ஒரு முறை தலைக் குளியல், கண்டிஷனர், மற்றும் தரமான ஷாம்பு, ஊட்டம் தரும் அழகுப் பொருட்கள் ஆகியவற்றை எல்லாம் முடிந்த வரை உபயோகித்திருப்பீர்கள். இருப்பினும் இந்த பிரச்சனைகள் நீங்கவில்லையா?
ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதும் சுருள் செய்வதும் எல்லாருக்கும் பிடித்தமனதாக இருக்கிறது. இது கூந்தலை மேலும் உதிரச் செய்யும். சிலருக்கு இவற்றில் சேர்க்கும் கெமிக்கல் மற்றும் வெப்பத்தினால் கூந்தல் தாக்குப்பிடிக்க முடியாமல் கொத்து கொத்தாய் உதிர்வதுண்டு. அப்படி கூந்த மோசமாய் உதிரும் பிரச்சனை இருக்கிறதா?
இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் என்னன்னவோ உபயோகித்தும், பயன் தராமல் இருந்தீர்கள் என்றால் இந்த குறிப்பை உபயோகப்படுத்திப்பாருங்கள். இது எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்.
தேவையானவை : வாழைப்பழம் – 1 அவகாடோ – 1 ஆலிவ் எண்ணெய் – 1-2 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன்
வாழைப்பழத்தையும், அவகாடோவின் சதைப்பகுதியையும் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, முடியின் நுனி வரை தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து, தலையை தரமான அடர்த்தி குறைந்த ஷாம்பு கொண்டு அலசவும்.
இந்த கலவையை வாரம் ஒரு முறை அல்லது இரு முறை உபயோகிக்கவும். இதனால் பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல், எல்லாம் நின்று முடி வளர்ச்சி ஆரம்பிக்கும். கூந்தல் பொலிவு பெறும். மிருதுவான கூந்தல் கிடைக்கும்.