27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sun 08 1467972187
சரும பராமரிப்பு

சூரியனிடமிருந்து தேங்காய் எண்ணெய் நம்மை எப்படி பாதுகாக்கிறது?

தேங்காய் எண்ணெயில் விட்டமின்களும் ஆன்டி ஆக்ஸிடென்டும் உள்ளது. தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தினமும் உபயோகித்தால், சுருக்கங்கள் எட்டிப் பார்க்காது. இளமையாகவே இருப்பீர்கள். இவை சருமத்திற்கு போஷாக்கு தருகின்றது. தோலிற்குள் எளிதில் ஊடுருவும்.

தேங்காய் எண்ணைய் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை தருகிறதோ அதே அளவு அழகிற்கும் தருகின்றது. வெயிலில் உண்டாகும் கருமையை எவ்வளவு எளிதில் போக வைக்க முடியாது.

இயற்கையில் நாம் நிறமாக இருந்தாலும் வெய்யிலின் பாதிப்பால் கருப்பாகிவிடுகிறோம். ஆனால் கேரளாவில் இருக்கும் மக்கள் வெய்யிலினால், கருமையடைவதில்லை. காரணம் தேங்காய் எண்ணெய். அவர்கள் அதனை தினமும் பூசி குளிப்பார்கள். அதனால்தான் சூரியக் கதிர்கள் அவர்களை பாதிப்பதில்லை.

புற ஊதாக்கர்களிடமிருந்து பாதுகாக்கும் : வெயிலில் செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெயை பூசிக் கொண்டால் , அது சருமத்திற்குள் ஊடுருவி, படலமாக ஏற்படுகிறது. இவை சக்திவாய்ந்த புற ஊதாக் கதிர்களை உள்ளே அனுமதிக்காமல் கவசமாக செயல்படுகிறது.

கெமிக்கல் இல்லை : நீங்கள் கடைகளில் வாங்கும் சன் ஸ்க்ரீன் லோஷன் தரம் வாய்ந்ததாக இருந்தாலும் கூட, அவற்றிலுள்ள கெமிக்கல் சருமத்திற்கு பாதகம் தரும்.

ஆனால் தேங்காய் எண்ணெயை சருமத்தில் உபயோகித்தால், வெகு நேரம் சூரிய கதிர்களிடமிருந்து பாதுகாக்கும். சூரிய கதிர்களால் வறட்சி உண்டாகாது. ஈரப்பதத்தை அளிக்கிறது.

தொற்றுக்களிடமிருந்து பாதுகாக்கிறது : நீங்கள் செல்லும் வெளியிடங்களில் எவ்வளோவோ கிருமிகள் அசுத்தங்கள் இருக்கும். அவை சருமத்தில் தொற்று நோய்களை பரப்பக் கூடியவை.

தேங்காய் எண்ணெய் இயற்கையிலேயே ஒரு கிருமி நாசினி. இதனை தடவிக் கொண்டு சென்றால் எந்த விதமான கிருமிகளும், தொற்றுக்களும் சருமத்தில் தாக்காது.

விட்டமின் டி தேவைக்கு : சருமம் கருமையாகிவிடுமென வெய்யிலிலேயே செல்லாமல் இருக்கக் கூடாது. ஏனெனில் விட்டமின் டி உறிய சூரிய ஒளி தேவை.

தேங்காய் எண்ணெய் பூசுவதால், விட்டமின் டி உடலுக்குள் வேகமாக உறிய உதவுகிறது. ஆனால் சன் ஸ்க்ரீன் லோஷன் விட்டமின் டி யை உடலுக்குள் உறியவிடாமல் தடுக்கிறது.

சன் பாத் எடுப்பவர்களுக்கு :

குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு சூரிய ஒளி இருக்கும்போது சன் பாத் எடுத்துக் கொள்ள மிகவும் விரும்புவார்கள். காரணம் அப்போதுதான் சூரிய ஒளியே அவர்களுக்கு கிடைக்கும். அந்த சமயங்களில் தேங்காய் எண்ணெயை உடலுக்கு பூசி மசாஜ் செய்துவிட்டுச் சென்றால், புற ஊதாக்கதிர்களிடமிருந்து தப்பிக்க முடியும்

sun 08 1467972187

Related posts

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

பார்லர் போறீங்களா?

nathan

சருமத்தை பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிவை

nathan

தினமும் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள்

nathan

பெண்களே உங்க அந்தரங்க பகுதி கருப்பா இருக்கா?

nathan

நலங்கு மாவு பொன் நிற மேனிக்கு…..அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது

nathan

வறட்சியினால் பாதங்களில் உரியும் இறந்த தோல்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்…

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்,beauty tips on tamil

nathan

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan