அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முகத்தை மட்டுமல்ல முதுகையும் பராமரிங்க

ld1062முகம் கை கால் என ஒவ்வொன்றிற்கும் தரும் முக்கியத்துவத்தை  முதுகு பகுதிக்கு தருவதில்லை. நம்மில் பெரும்பாலோனோர் அதிகம்  கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் முதுகு பகுதியில் அழுக்கு மற்றும் எண்ணெய் சேர்ந்து பருக்கள் தோன்றுவிடுகின்றன. எனவே முதுகை அழகுகாக்க கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

முதுகை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள். நீங்களும் உங்கள் முதுகின் அழகை  எடுத்துக்காட்டும் ஆடைகளை அணிய ஆரம்பித்து விடுவீர்கள்.

முதுகுக்கு ஸ்க்ரப் செய்யலாம்

குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவப்போல முதுகையும் கவனிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது வழியும் எண்ணெய்கள் முதுகில்தான் தேங்குகின்றன. எனவே நீளமான பிரஷ் உபயோகித்து முதுகை நன்கு தேய்த்து சுத்தம் செய்யவேண்டும்.

முதுகுப்  பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.

முதுகை `ஸ்க்ரப்’ செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். அவ்வாறு தொடர்ந்து செய்யும் போது புது சருமம் கிடைக்கும்.

கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். உப்பு சிறந்த ஸ்க்ரப் ஆக  பயன்படுகிறது. உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூல இறந்த செல்கள் உதிர்ந்து விடும். ரத்த ஓட்டம் சீராகும்.

ஆலிவ் ஆயில் மற்றும் மசாஜ்

ஒரு சிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால்  முதுகு மென்மையாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து
முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முதுகை கவனிக்காமல் விடுவதால் முதுகு மங்கலாகும். இதனால் முதுகில் கரும்புள்ளிகள், பரு தோன்றும்.

முதுகை அழகாக்கி பருவை போக்க இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து முதுகை நன்றாக தேய்த்து  கழுவவும். எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச் என்று ஆகும்.

வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு பொலிவு  கிடைக்கும். இவை தவிர கூன் போடாமல் நிமிர்ந்து நடப்பதும் முதுகு சுருக்கமின்றி அழகாக தெரியும். அப்புறம் என்ன ஜன்னல் வைத்த  மற்றும்
படிக்கட்டு வைத்த ஜாக்கெட் தைத்து போட்டு முதுகு அழகை அதிகரிக்கச் செய்யலாம்.

Related posts

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!…

sangika

நீங்களே பாருங்க.! தனுஷுடன் இரவு பார்ட்டியில் கும்மாளம் அடித்த மச்சினிச்சி!..

nathan

கணவருக்கு பளார் விட்ட ஜெனிலியா! வைரல் வீடியோ

nathan

இந்த ராசிக்காரர்களது திருமண வாழ்க்கை மிகவும் கசப்பாக இருக்குமாம்.. தெரிஞ்சிக்கங்க…

nathan

பிரதாப் போத்தன்! இறப்பதற்கு முன்பே மரணம் குறித்த பதிவு

nathan

டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்! பாரம்பரியம் VS பார்லர் ! ஹெல்த் ஸ்பெஷல்!!

nathan

அழகு குறிப்புகள்:மாசு மருவற்ற முகம் வேண்டுமா?

nathan

அழகுக்கு ஆப்பிள் பழம்

nathan

நிதி நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

nathan