30.2 C
Chennai
Saturday, Jun 29, 2024
p64a
தலைமுடி சிகிச்சை

வறண்ட கூந்தல்… இனி பளபளக்கும்!

டிரை ஹேர். பெண்கள் பலரை புலம்பவைக்கும் பிரச்னை. வறண்ட கூந்தலின் எண்ணெய்ப்பசையை மீட்டு பளபளப்பு கூட்டுவதற்கான பராமரிப்பு வழிகளை வழங்குகிறார், சென்னை, ‘விசிபிள் டிஃபரன்ஸ்’ பார்லரின் உரிமையாளர் வசுந்தரா.

கூந்தல் வறட்சி. காரணங்கள்!


* குளோரின் கலந்த தண்ணீரிலோ, உப்பு நீரிலோ கூந்தலை சுத்தம் செய்தால், சீக்கிரமே வறண்டு போய்விடும்.

* அதிக வெயில் அல்லது அதிக குளிர் சீதாஷ்ண நிலையிலும் கூந்தல் விரைவில் வறண்டுபோகும்.

* மலேரியா, மஞ்சள்காமாலை போன்ற நோய் கண்டவர்களுக்கு கேசத்தின் ஆரோக்கியம் குறைந்துபோகும்.

* புரதம், இரும்புச்சத்து, ஊட்டச்சத்து களின் குறைபாடு கூந்தலைப் பாதிக்கலாம்.

மேற்கண்ட காரணங்களில் உங்களின் கூந்தல் வறட்சிக்குப் பொருந்துவதைக் கண்டறிந்து சரிசெய்யவும்.

p64a

பார்லர் ட்ரீட்மென்ட்!

* டிரை ஹேருக்கான பார்லர் ட்ரீட்மென்ட்கள் நிறைய உள்ளன. ஆயில் மசாஜ், அதில் சிறந்தது. இதனால் ரத்த ஓட்டம் தூண்டப்படும், கேசத்துக்கு ஆரோக்கியமும், எண்ணெய்ப்பசையும், பொலிவும் கிடைக்கும்.

* க்ரீம் உடன் உங்கள் கேசத்துக்கு ஏற்றாற்போல் சத்து சேர்த்து ஸ்பா ட்ரீட்மென்ட் கொடுக்கிறார்கள். இதில் உங்கள் கேசத்துக்கு என்னவெல்லாம் ஊட்டச்சத்து குறைபாடோ, அவை யெல்லாம் கிடைக்கும்.

ஹோம்மேட் ட்ரீட்மென்ட்!

* ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் கலந்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, சிகைக்காய் பயன்படுத்தி அலசவும்.

* சிகைக்காய் பயன்படுத்தாதவர்கள் ஷாம்பு போட்டபின் தவறாமல் கண்டிஷனர் பயன்படுத்தவும்.

* ஹென்னாவுடன் முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், நெல்லிக்காய் பொடி ஏதேனும் ஒன்றை கலந்து `பேக்’ போட்டு அலசலாம்.

* ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை நல்லெண்ணையில் ஊறவைக்கவும். 2 அல்லது 3 நாட்கள் கழித்து நன்கு ஊறிய பின் இலைகளை வடிகட்டிவிட்டு, அந்த எண்ணெயை கேசத்துக்குத் தைலமாகப் பயன்படுத்தி வரவும்.

* எண்ணெயின் பிசுபிசுப்புத் தன்மையால் அதை தவிர்ப்பவர்கள், மார்க்கெட்டில் கிடைக்கும் ஹேர் சீரம் (கொழுப்பு நீக்கிய எண்ணெய்) வாங்கிப் பயன்படுத்தலாம்.

கூந்தல் ஆரோக்கியத்துக்கான உணவுகள்!

* புரதச்சத்து நிறைந்த சோயா, பனீர், உலர் பழங்கள், கடலை, பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* கீரை, பச்சை காய்கறிகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்

* எள், பால் இரண்டும் தொடர்ந்து சாப்பிட்டு வர, கேசம் அடர்த்தி பெறுவதோடு பளபளப்பாகும்.

* பச்சைப்பயறு, சுண்டல் போன்றவற்றில் கிடைக்கும் விட்டமின் சத்து வெயில், குளிரிலிருந்து கூந்தலைப் பாதுகாக்க வல்லது.

* தினம் ஒரு கப் தயிர் தவறாது எடுத்துக் கொள்ளவும்.

* தினமும் வெறும் வயிற்றில் பச்சை கறிவேப்பிலை ஒரு கொத்து சாப்பிட்டுவர. முடி உதிர்வது, நரை போன்ற பிரச்னைகளிலிருந்து காக்கும்; கூந்தல் மிருதுவாகும்.

Related posts

முடி வெடிப்பை தடுக்கும் ஹேர் மாஸ்க்

nathan

கொட்டும் தலைமுடிக்கு ‘குட்-பை’ சொல்ல உங்க ஷாம்புவோட இதெல்லாம் கலந்துக்கோங்க…

nathan

சும்மா தலைக்கு குளிச்சா என்ன ஆகும் தெரியுமா ?

nathan

செம்பருத்தி மாஸ்க்கை எப்படி கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க….

nathan

உங்களுக்கு எப்ப முடி வெட்டணும் தெரியுமா…?

nathan

ஆஸ்பிரின் மாத்திரையை தலைக்கு பயன்படுத்திய சில நிமிடங்களில் ஏற்படும் அதிசயம்!

nathan

இயற்கை முறையில் முடியை கையாள எளிமையான 3 டிப்ஸ் உங்களுக்காக! அடிக்கடி முடி கொட்டுதா?

nathan

முடி உதிர்வை அதிகரிக்கும் உணவுகள் – உஷார் ஆண்களே!!

nathan

நரை முடியை வளரவிடாமல் செய்யும் மூலிகை எண்ணெய் – பாட்டி சொன்ன வைத்தியம்!!

nathan