என்னென்ன தேவை?
வெங்காயம் – 1 (நறுக்கியது),
கறிவேப்பில்லை – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க…
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
தனியா – 1/2 டீஸ்பூன்,
கிராம்பு – 2,
ஏலக்காய் – 2,
பட்டை – ஒரு துண்டு,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 2,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
கசகசா – 1/2 டீஸ்பூன்.
தாளிக்க…
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து சீரகம், சோம்பு, தனியா, கிராம்பு, ஏலக்காய், பட்டை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். இத்துடன் தேங்காய் மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். இத்துடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்து கெட்டியான பின் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். சால்னா தயார்.