30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
07 1467874774 1 ginger
முகப் பராமரிப்பு

முகத்தில் இருக்கும் சுருக்கத்தைப் போக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க…

பொதுவாக 25 வயதிற்கு பின் தான் ஒருவரின் சரும கொலாஜன் மற்றும் நெகிழ்வுத்தன்மை தளர ஆரம்பித்து, அதனால் சரும சுருக்கம், முதுமைக் கோடுகள் போன்றவை தென்பட ஆரம்பிக்கும். இப்படி முதுமைக் கோடுகளும், சுருக்கங்களும் ஒருவரது முகத்தில் வெளிப்பட ஆரம்பித்தால், அது அழகைக் கெடுப்பதோடு, முதுமைத் தோற்றத்தையும் வெளிக்காட்டும்.

அதிலும் தற்போதைய மோசமான பழக்கவழக்கம் மற்றும் சுற்றுச்சூழலால், முதுமைத் தோற்றம் மிகவும் வேகமாக ஒருவருக்கு ஏற்படுகிறது. பலரும் தங்களது இளமையைத் தக்க வைக்க ஆன்டி-ஏஜிங் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தினால், சரும ஆரோக்கியம் இன்னும் மோசமாகத் தான் செய்யும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை சருமத்தின் இளமையைப் பாதுகாக்கும் சில ஃபேஸ் பேக்குகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அடிக்கடி முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முதுமைத் தோற்றம் தடுக்கப்பட்டு, இளமை தக்க வைக்கப்படும்.

இஞ்சி மற்றும் தேன் இஞ்சியைத் தட்டி பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதனாலும் முதுமையைத் தள்ளிப் போடலாம்.

வால்நட்ஸ் மற்றும் பாதாம் எண்ணெய் வால்நட்ஸ் மற்றும் பாதாமில் சருமத்தை இறுக்கும் தன்மை உள்ளது. எனவே 2 வால்நட்ஸை எடுத்து தட்டி, அத்துடன் 2 துளி பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி வட்ட சுழற்சியில் 5-10 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி அடிக்கடி செய்தால் முதுமையைத் தள்ளிப் போடலாம்.

ஆரஞ்சு ஜூஸ் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நல்ல பாதுகாப்பையும் வழங்கும். எனவே இந்த ஆரஞ்சு ஜூஸை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் பால் தேங்காய் பாலை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சருமம் மென்மையாகவும், இளமையுடனும் இருக்கும்.

பப்பாளி மாஸ்க் பப்பாளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, சரும செல்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைத்து, சருமம் பொலிவோடு இருக்கும்.

ஆலிவ் ஆயில் தினமும் ஆலிவ் ஆயிலைக் கொண்டு படுக்கும் முன் முகத்தை மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போல் செயல்படும் வைட்டமின்கள், சருமத்திற்கு ஈரப்பசையை வழங்குவதோடு, சருமத்தின் இளமைத்தன்மையைப் பாதுகாக்கும்.
07 1467874774 1 ginger

Related posts

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி…!!!

nathan

உங்கள் முகத்தை 15 நிமிடத்திலேயே பளிச்சென்று ஆக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

nathan

அற்புதமான எளிய தீர்வு! இரவு தூங்கும் முன் இப்படி செய்தால் சீக்கரம் வெள்ளையாவீங்களாம்! மறக்காம ட்ரை பண்ணுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா தயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்…

nathan

முகத்தில் சோர்வு நீங்க

nathan

வெயிலால் நிறம் மாறும் முகத்தை பளிச்சிட சூப்பர் டிப்ஸ்…

nathan

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் இத செய்யுங்கள்!…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போதுமே கலையாத மேக்கப் வேணுமா?

nathan

வீட்டிலேயே ப்ளீச் எப்படி செய்வது? அருமையாக ரெசிப்பிகள்

nathan