25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
7 01 1467354594
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்வதை கட்டுப்படுத்தும் அரிய மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இது அழகு மட்டுமன்றி ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகவும் கருதப்படுகிறது. உடலில் பாதிப்புள்ளாகும்போதும் முடி உதிரும், சுற்றுப் புற சூழ் நிலைகளாலும் முடி உதிரும்.

முடி உதிர்தல் பருவ நிலை மாறுபாட்டால் சற்று கூடுதலாகவே உதிரும். இதற்காக பயப்பட தேவையில்லை. போதுமான அளவு பராமரிப்பு கொடுத்தால், அழகிய கூந்தல் உங்களுக்கு சொந்தமாகும்.

கூந்தலை வளரச் செய்வதில் மூலிகைகளின் பங்கு அற்புதமானது. அவை அரிதாக கிடைக்கக் கூடியவை. ஆனால் முடி வளர்ச்சியை அபாரமாக தூண்டும். அவ்வகையான மிக முக்கியமான மூலிகைள் எவ்வாறு முடி உதிர்தலை கட்டுப்படுத்தி, அடர்த்தியாக வளரச் செய்கிறது என பார்க்கலாம்.

ஜென்செங்க் : இது ஒரு வகையான மருந்து வேர் இஞ்சி வகையை சார்ந்தது. ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும். இது தலையிலுள்ள வேர்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகபடுத்துகிறது. ஏதாவது ஒரு எண்ணெயில் இந்த வேரை ஊற வைத்து, தலையில் தேய்த்தால், முடி அற்புதமாக வளரும்.

ரோஸ்மெரி : ரோஸ்மெரி சக்தி வாய்ந்த மூலிகை. இது முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதோடு, புதிய முடி வள்ரவும் தூண்டுகிறது. ரோஸ்மெரியில் தேநீரில் தயாரித்து குடிப்பதால், நச்சுகள் வெளியேறி, முடி வளரச் செய்யும்.

பிருங்கராஜ் : தொடர்ந்து பிருங்க ராஜ் உபயோகப்படுத்தினால் முடி உதிர்வதை முழுவதுமாக நிறுத்திவிடும். நரை முடியை தடுக்கும். உங்கள் வேர்கால்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

ஜடாமம்ஸி : இதுவும் மிகவும் அரிதாக கிடைக்க க் கூடிய மூலிகை. இதனை எண்ணெயில் கலந்து, உபயோகப்படுத்தும்போது, முடி உதிர்வதை தடுத்து, நன்றாக வளரச் செய்யும். நரை முடி ஏற்படாது.

வேப்பிலை : வேப்பிலை, பொடுகு, அரிப்பு, சரும பிரச்சனைகளை அடியோடு நிறுத்திவிடும். முடி வளர்ச்சியை தூண்டும். கிருமிகளின் தாக்கத்தை அழிக்கும். இதனால் கூந்தல் போஷாக்கோடு வளரத்தொடங்கும்.

வேப்பிலையை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை தேவைப்படும்போது, நீரில் கலந்து தலையின் வேர்ப்பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் இரு முறை செய்தால், நன்றாக முடி வளரும்.

செம்பருத்தி :

செம்பருத்தியின் இலை, பூ எல்லாமே கூந்தலின் வளர்ச்சியை தூண்டவல்லது. முடியை அடர்த்தியாக வளரச் செய்வதோடு மட்டுமல்லாமல், கூந்தலை பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கும்.
7 01 1467354594

Related posts

இள வயதில் முடி நரைப்பதற்கான காரணங்கள்

nathan

வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கூந்தலின் நிறம்

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயத்தை பயன்படுத்துவது எப்படி?

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை எப்படி உபயோகப்படுத்தலாம் என தெரியுமா?

nathan

பொடுகுத் தொல்லைக்கு தீர்வு காண்பது எப்படி?அப்ப இத படிங்க!

nathan

வலுவான முடி வளர்ச்சிக்கு ஹென்னா முடி எண்ணெய் எவ்வாறு பயன்படுத்துவது

nathan

தலைக்கு எண்ணெய் தேய்த்து வந்தால் என்னனென்ன பயன்.!!

nathan

உங்கள் கூந்தலுக்கு இரட்டிப்பு ஆயுள் தர இதெயல்லாம் யூஸ் பண்ணி பாருங்க!! பலன்கள் அபாரம்!!

nathan