27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201610270920450913 Broccoli chapati SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி

ப்ராக்கோலி பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு, ஆரோக்கியமான சத்தான மற்றும் சுவையான ரொட்டி.

சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

ப்ராக்கோலி – கால் கப்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
கோதுமை மாவு – ஒன்றை கப்
உப்பு – தேவைகேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் ப்ராக்கோலி சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கி ஆற விடவும்.

* மிக்சியில் ஆற வைத்த ப்ரோகோலி, இஞ்சி, இரண்டு டீஸ்பூன் ப்ரோகோலி வேகவைத்த தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, உப்பு, அரைத்த விழுது, தேவையான அளவு வடிகட்டிய தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மாவை சப்பாத்திகளாக திரட்டி, முக்கோண வடிவில் மடித்து மறுபடியும் திரட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் உருட்டி வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தது திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி ரெடி.

* இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி சுவையாக இருக்கும்.201610270920450913 Broccoli chapati SECVPF

Related posts

வெள்ளரி அல்வா

nathan

சில்லி கார்லிக் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!

nathan

பலாப்பழ தோசை

nathan

சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan

மணக்கும் மாலை நேர நொறுவை! – மசாலா கடலை

nathan

பொரி உருண்டை

nathan

ஹோட்டல் சுவையை மிஞ்சிடும் ஈஸி இட்லி சாம்பார்…

nathan

சில்லி கொத்து சப்பாத்தி

nathan

மரவள்ளிக்கிழங்கு வடை

nathan