25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl3954
இனிப்பு வகைகள்

சுகர் குக்கீஸ் வித் ஐஸிங்

என்னென்ன தேவை?

சுகர் குக்கீஸ் செய்ய…

மைதா – 1 – 1/2 கப்
வெண்ணெய் (உப்பு சேர்க்காதது)
– 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
உப்பு – 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
தயிர் – 1 மேஜைக்கரண்டி
வெனிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி.

ஐஸிங் செய்ய…

ஐஸிங் சுகர் – 1 கப்
சுகர் ஸ்ப்ரின்க்ல்ஸ் – தேவைக்கேற்ப
ஃபுட் கலர் – தேவைக்கேற்ப
வெனிலா எசென்ஸ் – 1/2
தேக்கரண்டி
பால் – 2 மேஜைக்கரண்டி.

எப்படிச் செய்வது?

சுகர் குக்கீஸ்…

1. முதலில் குக்கீஸ் செய்து கொள்ளலாம். ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, ஒரு விஸ்க் கொண்டு கலந்து கொள்ளவும்.

2. இன்னொரு கிண்ணத்தில், மிருதுவான வெண்ணெய், சர்க்கரை சேர்த்து, நன்கு நுரைத்து லேசாகும் வரை, ஒரு விஸ்க் கொண்டு அடிக்கவும். எலெக்ட்ரிக் விஸ்க் கொண்டு செய்தால், 3 அல்லது 4 நிமிடங்கள் ஆகும்.

3. இதில் எசென்ஸ் மற்றும் தயிர் சேர்த்து, மேலும் இரு நிமிடம் அடிக்கவும்.

4. கலந்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

5. ஒட்டாத மாவு கிடைத்ததும், அதை தடிமனாக திரட்டி, பிளாஸ்டிக் வராப் கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் குறைந்தது 1 மணி நேரமாவது வைக்கவும்.

6. பிறகு ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து, சிறிது மாவு தூவி, 3-5 மி.மீ. மொத்தத்திற்கு திரட்டவும்.

7. உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு குக்கீஸ் கட்டர் கொண்டு வெட்டவும்.

8. ஓரங்களை முதலில் கையால் எடுத்து விட்டு, வெட்டிய வடிவங்களை, ஒரு தோசை திருப்பி கொண்டு கவனமாக எடுத்து, ஒரு பேக்கிங் ட்ரேயில், பட்டர் பேப்பர்/ பார்ச்மென்ட் பேப்பர் பரப்பி, அதன் மேல் வெட்டி எடுத்த குக்கீஸை வைக்கவும்.

9. அவனை 170 டிகிரி செல்சியஸ் சூட்டிற்கு ப்ரீ ஹீட் செய்து, 10-12 நிமிடம் வரை பேக் செய்யவும்.

10. பேக் செய்த குக்கீஸை ஆற வைத்துக் கொள்ளவும்.

ஐஸிங்…

1. ஒரு கிண்ணத்தில், ஐஸிங் சுகர், வெனிலா எசென்ஸ், பால் சேர்த்து வழுவழுப்பாக கலக்கவும். கட்டி இல்லாமல், கெட்டியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில், ஊற்றினால் ஊற்றும் அளவிற்கு இருக்க வேண்டும்.

2. தேவை என்றால், சிறு துளிகள்ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

3. கலந்த ஐஸிங்கை, ஒரு பாலிதீன் பை அல்லது சிப் லாக் பையில் நிரப்பி, கோன் போல செய்து கொள்ளவும். மேலே ரப்பர் பேண்ட் போட்டு வைக்கவும்.

4. நுனியில் மிகச் சிறிய துளை போடவும். கத்திரிக்கோல் வைத்து சிறிய பாகத்தை வெட்டி எடுத்தால் துளை கிடைக்கும்.

5. முதலில் குக்கீஸின் ஓரங்களில் விருப்பமான வடிவத்தை வரைந்து வைக்கவும்.

6. பிறகு, எல்லா குக்கீஸையும் இதே போல வரைந்து முடித்தவுடன், முதலில் வரைந்த குக்கீஸில், ஐஸிங்கை கொஞ்சமாக நிரப்பவும்.

7. மேலே சுகர் ஸ்ப்ரின்க்ல்ஸ் தூவவும். ஒரு மணி நேரம் வைத்தால், ஐஸிங் நன்கு காய்ந்து விடும். பிறகு, காற்று புகா டப்பாவில் போட்டு வைக்கவும்.

உங்கள் கவனத்திற்கு…

குக்கீஸ் மாவு மிகவும் தளர இருப்பின், ஒரு மேஜைக்கரண்டி மாவு மேலே தூவி பிசைந்தால் கெட்டி ஆகி விடும். மாவை, ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு முன்பே ஓரளவு திரட்டி வைக்க வேண்டும், இல்லையானால் பிறகு திரட்டுவது கடினம். மாவு திரட்டும் பொழுது உடைந்தது என்றால், கையால் சேர்த்து திரட்டவும். குக்கீஸ் வெள்ளையாக இருந்தால் தான் அழகாக இருக்கும். சிவக்க விட வேண்டாம். ஓரத்தில் முதலில் ஐஸிங்கை வரைந்தால்தான் பிறகு நிரப்பும் பொழுது வழிந்திடாமல்இருக்கும்.sl3954

Related posts

தேங்காய் பர்ஃபி

nathan

கருப்பட்டி நெய்யப்பம்

nathan

தித்திப்பான மைசூர்பாக்

nathan

பால்கோவா: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

nathan

சுவையான பானி பூரி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

nathan

பேரீச்சை பாதாம் லட்டு

nathan

வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி

nathan

மினி பாதாம் பர்பி

nathan