பலருக்கும் அக்குள் மட்டும் ஏன் கருப்பாக உள்ளது என்ற சந்தேகம் இருக்கும். அக்குள் கருப்பாக இருப்பதால், ஆண்கள் மற்றும் பெண்களால் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய கூச்சப்படுகிறார்கள். ஆனால் ஒருவரது அக்குள் கருமையாக இருப்பதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன.
அதில் சில நமது பழக்கவழக்கங்களும், சில உடல் மற்றும் சரும பிரச்சனைகளும் தான் முக்கிய காரணங்களாக உள்ளன. நீங்கள் உங்கள் அக்குள் ஏன் கருப்பாக உள்ளது என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படித்து வாருங்கள்.
காரணம் #1 ஷேவிங் சிலர் அடிக்கடி தங்கள் அக்குளை ரேசர் கொண்டு ஷேவ் செய்வார்கள். இப்படி அடிக்கடி ஷேவிங் செய்து வந்தால், சென்சிடிவ்வான அப்பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு, அதனால் அவ்விடம் கருமையாக ஆரம்பிக்கும்.
காரணம் #2 சர்க்கரை நோய் உடலில் இன்சுலின் சம்பந்தமான குறைபாடுகளாக சர்க்கரை நோய் இருந்தால், அதனால் உடலின் மற்ற பகுதிகளை விட அக்குள் கருமையாகும்.
காரணம் #3 ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஹார்மோன் சம்பந்தமான குறைபாடுகளான தைராய்டு பிரச்சனைகள் இருந்தால், அதன் காரணமாகவும் அக்குள் கருமையாகும்.
காரணம் #4 அசுத்தமான அக்குள் அக்குளில் அதிகம் வியர்வை வெளியேறுவதோடு, காற்றோட்டம் குறைவான பகுதி என்பதால், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அப்பகுதியில் தேங்கி, அப்பகுதியை கருமையாக மாற்றும். எனவே அடிக்கடி அக்குளை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
காரணம் #5 டியோடரண்ட்டுகள் டியோடரண்ட்டுகளை அளவுக்கு அதிகமாக அக்குளில் பயன்படுத்தும் போது, அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் மோசமான விளைவை உண்டாக்கி, அதன் காரணமாக அப்பகுதியை கருமையடையச் செய்யும்.
காரணம் #6 பாக்டீரியா தொற்றுகள் எரித்ரசமா என்னும் பாக்டீரியல் தொற்றானது சருமத்தைப் பாதித்தால், அப்பகுதி கருப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் மாறும். அதனால் தான் சிலரது அக்குள் வித்தியாசமான நிறத்தில் இருக்கிறது.
காரணம் #7 வாக்சிங் சில நேரங்களில், அடிக்கடி அக்குளை வேக்சிங் செய்வதன் மூலமும், அப்பகுதி கருமையாகும். அதுவும் வாக்சிங் செய்யும் போது மிகவும் கடுமையான வேகத்தில் அப்பகுதியில் உள்ள ரோமத்தை இழுத்தால், அங்குள்ள சரும செல்கள் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக அப்பகுதி